சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாத சம்பளம் வாங்குவோர், இஎம்ஐ கட்டுவோர் கவனத்துக்கு.. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள்

Google Oneindia Tamil News

சென்னை : ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி கூடுதலாக பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல் விடுமுறை நாடகளில இஎம்ஐ எடுப்பதும் இந்த மாதம் முதல அமலுக்கு வருகிறது. இதேபோல் விடுமுறை நாள் என்றாலும், அன்றைய நாள் சம்பளம் வருவதும் இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது வங்கிகள் வழியாக பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது (interchange fee structure) இன்டர்சேஞ்ச் கட்டணம் என அழைக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான (non-financial transactions) பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறுசுழற்சி இயந்திரங்களில் (Cash Recycler Machines) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா மச்சி.. இப்டி கூட Friendship day வாழ்த்து சொல்லலாம்பா!உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா மச்சி.. இப்டி கூட Friendship day வாழ்த்து சொல்லலாம்பா!

அதற்கு மேல் கட்டணம்

அதற்கு மேல் கட்டணம்

வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் இருந்து மாதம்தோறும் ஐந்து முறை பணம் எடுக்க கட்டணம் கிடையாது.அதேபோல பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மெட்ரோ நகரங்களில் மாதம் தோறும் மூன்று முறையும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறை வரையும் கட்டணம் விதிக்கப்படுவதில்லை.அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 வார இறுதி நாட்கள்

வார இறுதி நாட்கள்

இதனிடையே இன்று முதல் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதி அமலுக்கு வருகிறது. இதுபோலவே இஎம்ஐ போன்றவையும் வார இறுதி நாட்களில் செலுத்தும் வசதியும் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

 வேலை நாட்கள்

வேலை நாட்கள்

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வேலை நாட்களில் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மொத்தமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான மொத்த தொகை என்ஏசிஹெச் எனப்படும் தேசிய பணம் செலுத்தும் கார்பரேஷன் வழியாகவே வழங்கப்படும். வார இறுதி நாட்களில் விடுமுறை என்பதால் அடுத்த வேலை நாட்களில் மட்டுமே கிளியரன்ஸ் வசதி இருந்து வந்தது. இனி அனைத்து நாட்களிலும் செயல்படும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சனி ஞாயிறு

சனி ஞாயிறு

இன்று முதல் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனிமேல் வார வேலை நாட்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனி எல்லா நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் . சம்பளம் அல்லது ஓய்வூதிய சேவைகள் கிடைக்கும்.

பங்குகள் டெவிண்ட்

பங்குகள் டெவிண்ட்

சம்பளம் மட்டும் அல்லாமல் வங்கிக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்றவற்றையும் குறிப்பிட்ட அந்த நாட்களில், வார இறுதி நாட்களாக இருந்தாலும் இன்று முதல் செலுத்த முடியும். பங்குகளுக்கான டிவிடெண்ட்டையும் வார இறுதி நாள் ஞாயிறு என்றாலும் பெறலாம்.

English summary
The tariff hike will come into effect from today (August 1) for use in addition to the monthly free transaction allowed at ATMs. Similarly, EMIs on holiday draws will come into effect from this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X