சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல் மீதான தாக்குதல்.. அமைதி காக்கும் முக்கிய தலைவர்கள்.. ரஜினி இப்போதும் சைலன்ட்!

நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்கப்பட்டதற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் யாரும் இன்னும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கமலின் சர்ச்சை கருத்து... பற்றி எரியும் வடஇந்தியா

    சென்னை: நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்கப்பட்டதற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் யாரும் இன்னும் கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்.

    நேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று கமல் குறிப்பிட்டார். இதனால்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    கமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன?கமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன?

    கருத்து

    கருத்து

    ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை பெரிய அரசியல் தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினிடம் இருந்து இது தொடர்பாக எந்த கண்டன அறிக்கையும் வெளியாகவில்லை. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    திரையுலகினர் கருத்து

    திரையுலகினர் கருத்து

    அதேபோல் திரையுலகினர் யாரும் கமல்ஹாசன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். ஆனால் அவர் மீது நடந்து இருக்கும் இப்படி ஒரு தாக்குதலுக்கு எந்த நட்சத்திரமும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

    ரஜினி அமைதி

    ரஜினி அமைதி

    கமல்ஹாசனின் நண்பர் ரஜினிகாந்த் எப்போதும் போல இந்த முறையும் சைலன்ட் மோடில்தான் இருக்கிறார். கமல்ஹாசன் மீதான தாக்குதல் குறித்த அவர் வாய் திறக்கவே இல்லை. இப்படி ஒரு தாக்குதல் நடந்தது குறித்தாவது அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏற்கனவே கோட்சே குறித்த கமலின் பேச்சுக்கு ரஜினி கருத்து கூற மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜோதிமணி கருத்து

    இது தொடர்பாக தற்போது வரை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மட்டும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோதிமணி, இந்தியாவின் முதல் தீவிரவாதி தனது வாழ்நாளை இந்த தேசத்திற்காக அர்ப்பணித்து, சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தேசப்பிதா மகாத்மாவைக் கொன்ற கோட்சேதான்.தீவிரவாதிகளோடு மதத்தை இணைக்கத்தேவையில்லை. கமலின் கருத்தை இன்னொரு கருத்தால் மட்டும் எதிர்கொள்வதே ஜனநாயகம். கற்களால் எதிர்கொள்வது வன்முறை, என்று டிவிட் செய்துள்ளார்.

    English summary
    Attack On Kamal Haasan: No major politicians have condemned the attack till now in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X