சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரியர்ஸ் வச்ச அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்களே.. உங்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு..!

Google Oneindia Tamil News

Recommended Video

    அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படித்த முன்னாள் மாணவர்களுக்கு, அரியர்ஸ் எழுத மீண்டும் வாய்ப்பு

    சென்னை: அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் படித்த முன்னாள் மாணவர்களுக்கு, அரியர்ஸ் எழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களின் நலன் கருதி, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைகழக பதிவாளர் கூறியுள்ளார்.

    இதனால் அண்ணா பல்கலைகழகத்தில் பயின்ற சுமார் 30,000 மாணவர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது பாடத்திட்டம் மற்றும் மறு மதிப்பீடு முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    Attention of the former students of Anna University..Repeat the chance to write failed exams

    அண்ணா பல்கலைகழகம், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா டெக்னாலஜி, எம்ஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் மறு கூட்டல் செய்யும் விதத்தில் மாற்றப்பட்டுள்ள மறு மதிப்பீடு முறை, பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர பதிவாளரை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைகழக பதிவாளர் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் கட்டணம் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை! டெல்லியில் வாக்குப்பதிவு நாளில் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை!

    இதற்காக தமிழக அரசின் ஒப்புதல் கோரபப்ட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் தேர்வெழுதி அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்

    அதன்படி பழைய மாணவர்கள் அரியர்ஸ் வைத்துள்ள பாடங்களை வரும் நவம்பர் மற்றும் டிசம்பரில் எழுதலாம். இதுவே கடைசி வாய்ப்பு என்று பதிவாளர் குமார் குறிப்பிட்டார்.

    English summary
    Anna University gave a chance to former students to write arrear exams again and said this is the last chance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X