சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிளஸ் 2 இறுதி நாள் தேர்வு எழுதாதவர்கள் கவனத்துக்கு.. மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்குவது எப்படி

Google Oneindia Tamil News

சென்னை: கடந்த மார்ச் 24-ம் தேதி நடந்த 12ம் வகுப்பு தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வரும் ஜூலை 27ம்தேதி தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    12th Exam Results: இப்பவும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் "கடந்த கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    Attention those who did not write the Plus 2 final day exam : Re-exam announced

    இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் அவர்கள்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

    இதற்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம். தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

    தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. அசத்தலாக படித்த சிறைக் கைதிகள்.. 50 பேர் தேர்ச்சி தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. அசத்தலாக படித்த சிறைக் கைதிகள்.. 50 பேர் தேர்ச்சி

    தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். எனவே மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைநாளைக்குள் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

    English summary
    Attention those who did not write the Plus 2 final day exam : Re-exam will be held on july 27. hall ticket will get www.dge.tn.gov.in website
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X