சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயசான பாட்டிகளை மட்டும் குறி வைக்கும் சுந்தர்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் பின்னணி!

பாட்டிகளிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்ட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வயதான பாட்டிகளை குறிவைக்கும் இளைஞர் | 4 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- வீடியோ

    சென்னை: வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டது!

    சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நகை திருட்டு சம்பந்தமாக நிறைய புகார்கள் ஒரே சமயத்தில் வர ஆரம்பித்துவிட்டன.

    Auto driver arrested for cheating in Chennai

    இதனால் திகைத்து போன செம்மஞ்சேரி போலீசார், இதற்காகவே ஒரு தனிப்படை அமைத்து, நோட்டமிட்டு வந்தனர். அப்போதுதான், சிசிடிவி காமிராவில் சுந்தர் என்பவர் சிக்கினார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது வேலையே, யாராவது வயசான பாட்டி கடைகளில், வீட்டு வாசப்படிகளில் உட்கார்ந்திருந்தால் அவர்களிடம் சென்று ஏமாற்றுவதுதான்.

    பாட்டிகளிடம், "பக்கத்துல சேட்டு வீட்டுல கிரகப்பிரவேசம் நடக்குது. நீங்க வயசானவங்க.. நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணினால் 1000 ரூபாய் தருவாங்க" என்று சொல்வாராம். பணத்துக்கு ஆசைப்பட்ட பாட்டிகளும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.

    சிறிது தூரம் சென்ற பிறகு, "பாட்டி.. கழுத்தில், காதில் நகைகளை பார்த்தால், சேட்டு காசு தர மாட்டார். கழட்டி என்கிட்ட தாங்கள்" என்று நைசாக பேசி வாங்கி விடுவாராம். கறார் பாட்டிகளாக இருந்தால், கத்தியை காட்டி மிரட்டி நகையை பிடுங்கி கொண்டு பாதியிலேயே இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம்.

    சிசிடிவி கேமராவில் பதிவான அந்த ஆட்டோ நம்பரை வைத்துதான், சுந்தரை பிடித்திருக்கிறார்கள் போலீசார். இவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார் சுந்தர். அவரிடமிருந்துஆட்டோ, 9 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, இப்போது ஜெயிலில் அடைத்துவிட்டனர்

    English summary
    Chennai police has arrested auto driver in Cheating Case and jewely was seized from him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X