சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Tamilnadu Auto: சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இயங்கத் தொடங்கிய ஆட்டோக்கள்.. பயணிகள் வரத்து குறைவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் பயணிகள் போதிய அளவுக்கு வரவில்லை.

ஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கொடுத்தது.

"ஐயா, நெஞ்சு வலிக்குது".. கவலைப்படாதே தம்பி.. ஆறுதல் தந்த முதல்வர்.. ஆக்ஷனில் குதித்த பீலா ராஜேஷ்!

Auto rickshaws run in Tamil Nadu, except Chennai form today

ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், இன்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ஆனால் போதிய அளவுக்கு பயணிகள் வரவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆட்டோவில் ஒரே பயணி என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

English summary
Auto rickshaws run in Tamil Nadu, except Chennai form today but with many conditions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X