சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் - இரட்டை சகோதரர்களுக்கு முதல்வர் பாராட்டு

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சகோதரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை-மேலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோரை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்த சகோதரர்கள் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்காகவே முதல்வரிடம் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மேலுாரில் இரட்டையர்கள் பாலகுமார், பாலசந்தர் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Automatic Ambulance Signal Technology - CM greets Twin Brothers

உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும் இரண்டு கிலோமீட்டர் துாரம் முன்பு அதில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதைதொடர்ந்து சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து ரோட்டோர மின் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் 'ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள்' என்று தெரிவிப்பதோடு ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.

Automatic Ambulance Signal Technology - CM greets Twin Brothers

ஆம்புலன்ஸ் கடந்ததும் மீண்டும் எஸ்எம்எஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஒலிபரப்பு துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளனர் இந்த இளம் விஞ்ஞானிகள். சிறு வயதில் விபத்தில் காயமுற்ற தந்தை ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் இறந்தார். இதன் காரணமாகவே தானியங்கி சிக்னலை கண்டுபிடித்தோம் என்கின்றனர்.

முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சகோதரர்களை பாராட்டியுள்ளார்.

எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி - களை பறித்த விவசாயி பெண்களுடன் கலந்துரையாடல் எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி - களை பறித்த விவசாயி பெண்களுடன் கலந்துரையாடல்

English summary
Chief Minister Edapadi Palanisamy post on his twitter page, Balachander and Balakumar, twin brothers from Madurai-Melur, have been lauded for inventing "automatic ambulance signal technology" to speed up ambulance traffic. My congratulations on continuing the noble discoveries of both brothers!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X