சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அங்கிள் அங்கிள்.. நான் தண்ணீல வழுக்கி விழுந்துட்டேன்.. ஆவடியில் முதல்வரிடம் சிறுவன் கம்ப்ளைண்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: அங்கிள் அங்கிள் தண்ணீல நான் வழுக்கி விழுந்துட்டேன் என ஆவடியில் வெள்ள நிவாரண பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுவன் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் இடுப்பளவு, கழுத்தளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் அன்று முதல் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார்.

Omicron Corona: டெஸ்டிங்கை அதிகப்படுத்துங்க.. கவனமாக இருங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரைOmicron Corona: டெஸ்டிங்கை அதிகப்படுத்துங்க.. கவனமாக இருங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

மூழ்கிய பயிர்கள்

மூழ்கிய பயிர்கள்

டெல்டா மாவட்டங்களிலும் மழையால் மூழ்கிய பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது மீண்டும் சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ. மழை பதிவானது என்றும் இது நான்காவது முறை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெள்ளம்

வெள்ளம்

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வரும் 30-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். மேலும் புதிய புயல் சின்னமும் உருவாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வெள்ளம பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

வெள்ளம் பாதித்த பகுதிகள்

வெள்ளம் பாதித்த பகுதிகள்


அப்போது அவர் ஸ்ரீராம் நகரில் வெள்ளம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதை கண்காணித்து ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் தண்ணீர் தேங்கியதால் மின் மோட்டார்கள் பழுதடைந்துவிட்டதாக கவலை தெரிவித்தனர். அப்போது ஒரு சிறுவன் அங்கிள் அங்கிள் என்றான். அந்த சிறுவனின் பெற்றோர் வேறு ஏதோ சொல்ல வருகிறான் என நினைத்து "உஸ்..உஸ்.." என அதட்டினர்.

Recommended Video

    பூந்தமல்லி, திருவேற்காட்டில் வெள்ளம்.. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. நேரில் ஆய்வு
    சிறுவன்

    சிறுவன்

    அப்போது அந்த சிறுவன் மீண்டும் அங்கிள் அங்கிள் என அழைத்தான். முதல்வரிடம், அங்கிள் நான் தண்ணீல வழுக்கி விழுந்துட்டேன் என்றான். அதற்கு முதல்வர் செல்லமாக வழுக்கி விழுந்துட்டியா என கேட்டு உன் பெயர் என்ன என கேட்டார். அதற்கு அந்த சிறுவன் கோவேந்திரன் என தெரிவித்தான்.

    English summary
    A small boy complaint about he fell down in rain water to CM Stalin who review in Avadi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X