சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'இனி ஒரு ஏமாற்றம் வேண்டாம்'.. இரு சக்கர வாகனத்தை பைனான்ஸில் வாங்குவோர் கவனத்துக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: இருசக்கர வாகனத்தை இன்றைய நிலையில் பலரும் பைனான்ஸில் தான் வாங்க விரும்புகிறார்கள். ஆனால் அப்படி வாங்குவோர் சில விஷயங்களை கவனிக்காமல் விடுவதால், மிகப்பெரிய தொகையை அபராதமாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏன் இப்படி ஒரு நிலை என்பதை இப்போது பார்ப்போம்.

இன்றை நவீன வாழ்க்கை முறையில் இரு சக்கர வாகனம் எல்லாருக்குமே இன்றியமையாத ஒன்று. இந்த வாகனத்தை இன்றைக்கு 5000 ரூபாய் முன்பணம் கட்டினாலே ஓடடிச் செல்லலாம். இதற்கு காரணம் பைனான்ஸ். அது தாங்க நிதி நிறுவனங்கள். தனியார் நிதி நிறுவனங்கள் ஒவ்வொரு வாகன ஷோருமிலும் கிளைகளை பரப்பி வாகனம் வாங்க கடன் வசதி செய்தி தருகின்றன.

பைனான்ஸ் மூலம் வாகனம் வாங்குவோருக்கு வங்கி கணக்கு மூலம் பணம் பிடிக்கும் முறை உள்ளது. இன்னொரு முறையாக வாகனத்தை வாங்கி ஷோருமிலேயே பணத்தை செலுத்தும் முறை உள்ளது. கிராமப்புறங்களில் அல்லது சென்னையை தவிர பிற நகரங்கள், மற்றம் சிறிய நகரங்களில் ஏராளமானோர் மக்கள் வாகனத்திற்கான கடனை அந்தந்த வாகன ஷோருமில் சென்று தான் கட்டி வருகிறார்கள்.

 அபராதம் வாங்குவதில்லை

அபராதம் வாங்குவதில்லை

அப்படி வாகனத்திற்கான மாதாந்திர தொகையை(இஎம்ஐ) இத்தனை மாதம் என்று சொல்லித்தான் ஒப்பந்தம் போடுவார்கள். இந்த தேதிக்குள் கட்ட வேண்டும் என்பார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாவிட்டால் அபராதம் விதிப்பார்கள். இது இயல்பான நடைமுறை தான். சில இடங்களில் பைனான்ஸ்களில் வாகனத்தை வாங்கும் மக்கள் சரியான தேதிக்குள் சென்று கட்டாமல் சில நாட்கள் கழித்து தொகையை கட்ட சென்றால் கட்டிய தொகையை மட்டும் வசூக்கிறார்கள். அபராதம் வசூலிப்பது இல்லை.

எச்சரிப்பதோடு சரி

எச்சரிப்பதோடு சரி

அதுதான் அவர்கள் அபராதம் கேட்கவில்லையே என்று அஜாக்கரதையுடன் மாதம் மாதம் தாமதாமாக மாதாந்திர தவணை தொகையை கட்டுகிறார்கள் அப்படி வருபவர்களிடம் வாகன பைனான்ஸ் நிறுவனத்தினர் சரியான நேரத்தில் கட்டுங்கள் என்று மட்டும் எச்சரிக்கிறார்கள். ஆனால் அபராதத்தை விதிப்பது இல்லை. குறிப்பாக கடைசி இரண்டு மாத மாதாந்திர தவணைகள் வரும் போது கொஞ்சம் அஜாக்கரதையுடன் இருந்து தாமதமாக கட்டி முடிக்கிறார்கள்.

அபராதம் ஆயிரமாகும்

அபராதம் ஆயிரமாகும்

இப்படி அஜாக்கரதையுடன் சில வாரங்களோ , ஒரு மாதங்களோ தாமதம் என்று தள்ளிதள்ளி கட்டி ஒரு வழியாக முழு தவணையும் முடியும் போது ஆர்சி புக்கை மக்கள் கேட்பார்கள்.அப்போது வாகனத்தை பைனான்ஸ் விட்டவர்கள் நீங்கள் ஒவ்வொரு மாதமும் இத்தனை நாட்கள் தாமதாக வாகனத்திற்கான மாதந்திர தொகையை கட்டி உள்ளீர்கள் .எனவே ஒப்பந்தப்படி, ஒவ்வொரு மாதத்திற்குமான அபராத தொகை இவ்வளவு என்று ஆயிரங்களில் அபராதத்தை நீட்டுவார்கள்.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

அப்போது தான் தாமதத்திற்கு அபராதம் விதிக்கும் விஷயமே மக்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் மக்கள் கடைசியில் அபாரதமாக ஆயிரங்களை அழுதுவிட்டு கடைசியில் புலம்பியடி வாகனத்திற்கான ஆர்சி புக்கை வாங்கி செல்கிறார்கள். எனவே மாதந்திர தவணை விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்னொரு வகையிலும் ஏமாற்றங்கள் வருகிறது.

பல ஆயிரங்கள் அபராதம்

பல ஆயிரங்கள் அபராதம்

சில இடங்களில் மக்கள் வாகனத்திற்கான இஎம்ஐகளை சில மாதங்கள் கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். அதை கேட்டு கேட்டு பார்க்கும் பைனான்ஸ்கார்கள் சில மாதங்கள் கேட்பதோடு நின்றுவிடுகிறார்கள். இதனால் ஆஹா எதுவும் கேட்கவில்லை. ஜாலி தான் மக்கள் ஹாயாக வண்டிக்கான பணத்தை காற்றாமல் சுற்றுவார்கள். அப்படி சுற்றும் போது சில மாதங்கள் கழித்து திடீரென வந்து இத்தனை ஆயிரம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும். கட்டினால் வண்டியை தருகிறோம். இல்லாவிட்டால் வண்டி எடுத்து செல்கிறோம் என்று மிரட்டுவார்கள். கடைசியில் தண்டமாக பல ஆயிரங்களை அழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. வட்டிக்கு வட்டி என மொத்தமாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். எனவே இருசக்கர வாகனத்தை பைனானஸில் வாங்குவோர் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் ஏமாற்றம்.

English summary
Awareness story: who will buy bikes from finance in showrooms, please avoid this, because Defrauded
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X