சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு. சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி உமாபதி மேல்முறையீடு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி, தண்டிக்கப்பட்ட குற்றவாளி உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Ayanavaram girl rape case: Umapati appeals for revocation of jail term

இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.

மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கோரி 5 ஆண்டு சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எலக்ட்ரீசியனாக பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையில், பிளம்பர் என குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம் பெறவில்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து இருக்க வேண்டும் என்றும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையான ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

மேலும், தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ayanavaram girl rape case. convect Umapati appeals madras high court for revocation of jail term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X