சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அங்கிட்டு அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை.. இங்கிட்டு ட்விட்டரில் டிரெண்டிங்கான #LandOfRavanan

Google Oneindia Tamil News

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ட்விட்டரில் #LandOfRavanan என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம், இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இதனையடுத்து அந்த இடத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது.

Ayodhya Ram Temple Bhoomi Pujan- #LandOfRavanan trending in Twitter

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்தவிழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கிடையே ராவணன் ஆதரவாளர்கள், #LandOfRavanan என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்துள்ளனர்.

#LandOfRavanan ஹேஷ்டேக்கில் Shashank @riseupshashank என்ற ட்வீட்டிஸ்ட், யோகியைப் போல ராவணனும் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர்தான்; அவரையும் வழிபட வேண்டும் என எழுதியுள்ளார்.

அதியன் கார்த்தி @athiyankarthi என்பவர், ராமர் தேவைப்படுகிற போது ராவணனும் தேவை என பதிவிட்டிருக்கிறார். Bharani Kumar @Bharani61987536 என்ற நெட்டிசனோ, இன்றைய நாள் திராவிடர்கள் நாள் என குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடிராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி

Rengarajan @renga44 என்ற ட்வீட்டிஸ்ட், தமிழர் நிலத்தின் மாபெரும் பேரரசன் ராவணன் என புகழாரம் சூட்டியிருக்கிறார்

Boobalan @Boobalan2015 தமது கருத்தாக ராவணனுக்கும் அரசை இழந்த ராமனுக்குமான யுத்தம் இப்போதும் தொடருகிறது என பதிவு செய்திருக்கிறார்.

Recommended Video

    Ayodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா? | Oneindia Tamil

    English summary
    #LandOfRavanan is now trending in Twitter on Ayodhya Ram Temple Bhoomi Pujan day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X