சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி- உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பும் மதித்து நடக்க வேண்டும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ள தீர்ப்பை அனைத்து தரப்பும் மதித்து நடக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளைக் கடந்து தற்போது உச்சநீதிமன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை இன்று வழங்க உள்ளது.

    Ayodhya verdict: TN CM Edappadi Palanisamy appeals for calm

    உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கவுள்ள நிலையில் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து, எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu Chief Minister Edappadi Palanisay today appealed for calm on the eve of the Ayodhya land dispute Verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X