சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா மாற்றம்.. அந்தர் பல்டி தம்பிதுரை.. வசனத்தை தூக்கிப் போட்டு கூட்டணியை வரவேற்றார்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆஹா.. இதுவல்லவோ அந்தர் பல்டி என்று விழி விரிந்து வியந்து போகும் அளவுக்கு ஒரு பல்டியைப் போட்டுள்ளார் தம்பிதுரை, அடுத்து வரும் மத்திய அரசில் அதிமுக பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.


அதிமுக என்ன பாவம் செய்தது பாஜகவை நாங்கள் தூக்கி சுமக்க இதுபோன்று பல்வேறு அதிரடி வசனங்கள் பன்ச் டயலாக்குகள் எல்லாம் பறந்து வந்தன அதிமுக வட்டாரத்தில் இருந்து. அதைக் கூறியவர் இந்திய திருநாட்டின் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான திருவாளர் தம்பிதுரை.

தமிழ்நாட்டில் பாஜகவின் செயல்பாடுகளை கண்டு கொதித்து போயிருந்த அதிமுக தொண்டர்களுக்கு அய்யா நமது கட்சியில் இப்படியும் ஒருத்தரா பரவாயில்லையே நாடாளுமன்றத்திலேயே நம்ம ஆளு பாஜகவை பொளந்து காட்டுகிறாரே என்றெல்லாம் அந்த தொண்டர்கள் புளகாங்கிதம் அடைந்து போனார்கள். தொலைக்காட்சிகளில் பேசிய சில அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கூட நாங்கள் அம்மா வழியில் தனித்து நின்றே தேர்தலை சந்திப்போம் என்றெல்லாம் அடித்து விட்டார்கள்.

பாமகவுடன் கூட்டணி

பாமகவுடன் கூட்டணி

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இன்று காலை அதிமுக பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் கூட 5+1 அல்லது 6+1 என்றுதான் கொடுப்பார்கள் இவர்களும் அவ்வளவுதான் கேட்பார்கள் என்று பலதரப்பிலும் செய்திகள் பரவிய நிலையில் பாமகவுக்கு அள்ளிக் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டிக் கொண்டது அதிமுக.

சரியான நிலைப்பாடு

சரியான நிலைப்பாடு

இந்த நிலையில் இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நிருபர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தது சரியா? இது நியாயமா என்று தனது ஆதங்கத்தை கேட்க அப்படி ஒரு பதிலை சொல்லி அதிரடித்தார் தம்பிதுரை.

கூட்டணின்னா என்ன

கூட்டணின்னா என்ன

அதாவது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு, இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஒரு எதிரியை வீழ்த்த ஒருமித்த கருத்துள்ள சில கட்சிகள் ஒன்றிணைவது உண்டு. அதைத்தான் கூட்டணி என்று அழைக்கிறோம் என்றெல்லாம் விளக்கம் அளித்தவர் அதைத்தான் எங்கள் கட்சி செய்தது இதை நான் வரவேற்கிறேன். என்றவர் இதெல்லாம் எங்களிடம் கேட்கிறீர்களே என்று செய்தியாளர்களை கேட்டவர் கடந்த தேர்தலின்போது காங்கிரசை கழட்டி விட்ட திமுக இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதே? இதையெல்லாம் அவர்களிடம் சென்று கேட்பீர்களா என்று பொங்கினார் இந்த பொங்கலோடு அடுத்து பெரும் பொங்கல் வைத்ததுதான் கதையில் பெரும் திருப்பமே.

பாஜக ஆட்சியில் பங்கேற்போம்

பாஜக ஆட்சியில் பங்கேற்போம்

தங்களது கூட்டணியில் பாமக வந்ததை வரவேற்றவர் ராமதாஸ் சொன்னதையும் வரவேற்றார் அதாவது அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்கும் அதாவது அடுத்தும் பாஜக ஆட்சிக்கு வரும் அந்த ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று அந்தர் பல்டி ஆகாசப் பல்டி அடித்துள்ளார் தம்பிதுரை.

இம்மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை கூட கிழித்து தொங்கவிட்ட தம்பிதுரை நேற்றுவரை அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்காது என்று திரும்பிய திசையெல்லாம் வீர முழக்கமிட்டவர் இன்று இப்படி ஒரு பயங்கர பல்டி அடித்துள்ளார்.

அமோகமான பல்டி

அமோகமான பல்டி

அணிகள் இணைந்தபோதே தனக்கு எப்படியும் மத்திய அமைச்சர் பதவி அல்லது முதலமைச்சர் பதவி வரவேண்டும் என்றெல்லாம் பிரார்த்தித்தவர் இது இரண்டும் நடக்காமல் போனதால் பாஜகவையும் மோடியையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெச்சு செய்து வந்தார். ஆனால் இப்போது கூட்டணி உறுதியாகிவிட்ட சூழலில் அடுத்து பாஜக ஆட்சி அதில் அதிமுக அங்கம் என்ற ராமதாசின் வார்த்தைகளை எப்படி வழி மொழிந்துள்ளார். இதைக் கேட்கும் அதிமுக தொண்டனின் காதுக்குள் நிச்சயம் தேன் வந்து பாயும்.

English summary
Deputy Speaker of Lok Sabha Thambidurai has welcomed ADMK PMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X