சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லா நினா..வெகுவாக குறைந்த வடகிழக்கு பருவமழை..குளிருக்கு காரணம் கூறிய பாலச்சந்திரன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இயல்பு அளவை விட கடந்த வாரம் 9 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். 16 மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பதிவாகவில்லை, 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியும் மழையை தரவில்லை. அது கடலிலேயே வலுவிழந்து விட்டது. பெரிய அளவில் மழையை எதிர்பார்த்தும் ஏமாற்றமே ஏற்பட்டது.

தற்போது தமிழகத்தில் வெயிலடித்தாலும் குளிர் காற்று வீசுகிறது. இதற்கு வானிலை ஆய்வாளர்கள் காரணங்களை கூறி வருகின்றனர். மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதிகளில், வழக்கமான இயல்பை விட வெப்பம் குறைவாக இருக்கின்றது. இதற்கு லா நினா (La Nina) காரணம். இந்தச் சூழலில் குளிர் அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இனியாவுக்கு சாதகமாக மாறிய கோபி... அதிர்ச்சியில் ராதிகா செய்த செயல்.. பாக்யாவின் எதிர்பாராத முடிவு இனியாவுக்கு சாதகமாக மாறிய கோபி... அதிர்ச்சியில் ராதிகா செய்த செயல்.. பாக்யாவின் எதிர்பாராத முடிவு

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

வீடியோ பதிவில் கூறியுள்ள பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும். இந்தியப் பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லா நினா' என்ற நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாக கணிக்க முடியாது.

வானிலை முன்னறிவிப்புகள்

வானிலை முன்னறிவிப்புகள்

வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கியதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்கு சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை குறைந்தது ஏன்

மழை குறைந்தது ஏன்

கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையாயத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். 16 மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பதிவாகவில்லை, 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது.

4 சதவிகிதம் அதிகம்

4 சதவிகிதம் அதிகம்

அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பை விட 4 சதவிகிதம் அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இதுவரை இயல்பு அளவான 317 முடி.மீட்டரை விட 330.மி.மீ மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நவம்பர் 17 முதல் 23ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை குறைந்தது.

டிசம்பர் 8 வரை மழை குறைவுதான்

டிசம்பர் 8 வரை மழை குறைவுதான்

நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையான காலத்தில் இயல்பை விட குறைவான மழையே பெய்யும். கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 9 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என தெரிவித்தார். என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

எல் நினோ - லா நினா

எல் நினோ - லா நினா

பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லா நினா' என்ற நிலையில் உள்ளதாக பாலச்சந்திரன் கூறியுள்ளார். லா நினா என்றால் என்ன அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்றும் பார்க்கலாம். பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம். எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.

வெப்பமும் குளிரும்

வெப்பமும் குளிரும்

இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.

தாங்க முடியாத குளிர்

தாங்க முடியாத குளிர்

சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன. எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் கடுங்குளிரை பலரும் உணர்ந்திருப்பார்கள். அந்த குளிருக்கான காரணத்தையும் வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Balachandran, head of the Meteorological Center, said that last week, Tamil Nadu received 9 percent less rain than normal. Balachandran also said that 16 districts did not receive any rainfall last week and 22 districts received less than normal rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X