சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு வாய்ப்பு.. அதிமுகவின் சென்டிமென்ட் எடுப்படுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஓசூரில் போட்டியிட வாய்ப்பு- வீடியோ

    சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவிக்கு ஒசூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவின் சென்டிமென்ட்டல் டச் வொர்க் அவுட் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக, திமுக, அமமுக ஆகியன வெளியிட்டன. இந்த நிலையில் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டன.

    இந்த நிலையில் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு பெண் வேட்பாளர் ஜோதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக. இவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதியாவார்.

    2 அமைச்சர்களும் சேர்ந்து சரியாக காய் நகர்த்தி.. ராஜ கண்ணப்பனையே ஓரம் கட்டிட்டாங்களே!2 அமைச்சர்களும் சேர்ந்து சரியாக காய் நகர்த்தி.. ராஜ கண்ணப்பனையே ஓரம் கட்டிட்டாங்களே!

    நெருக்கம்

    நெருக்கம்

    ஜோதி பொது வாழ்வில் அனுபவம் வாய்ந்தவர். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். ஆனால் இதே தொகுதியில் போட்டியிட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிறைய ஆர்வம் காட்டினார். ஆனால் பாலகிருஷ்ணா அதிமுக தலைமைக்கு தந்த நெருக்கடியால் இந்த சீட்டை வாங்கி.. விட்டதை பிடித்துவிட்டார்!

    3 ஆண்டுகள் சிறை

    3 ஆண்டுகள் சிறை

    வழக்கின் பின்னணி: 20 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது.

    திமுக நகர பொறுப்பாளர்

    திமுக நகர பொறுப்பாளர்

    இதையடுத்து ஒசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொகுதியில் போட்டியிட பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட திமுக நகர பொறுப்பாளர் சத்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வழக்குகள்

    வழக்குகள்

    பொதுவாக ஒரு தொகுதியின் எம்எல்ஏ அகால மரணம் அடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ அல்லது எதிர்க்கட்சியினரால் தாக்கப்பட்டாலோ அந்த காரணத்தை காட்டி அவர் சார்ந்த குடும்பத்தினருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும். சென்டிமென்ட் காரணமாக மக்களும் ஓட்டு போட்டுவிடுவார்கள். இதற்கு உதாரணமாக எத்தனையோ வழக்குகளை சொல்லலாம்.

    எப்படி அனுதாபம்

    எப்படி அனுதாபம்

    ஆனால் இங்கு கைது செய்யப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டியோ தமிழக- கர்நாடக எல்லையில் நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் சிறை சென்றவர். எனவே இவர் மீது எப்படி மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்.

    அதிமுகவினருக்கு

    அதிமுகவினருக்கு

    இந்த தாக்குதலால் எத்தனை பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பர். அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அதிமுக எப்படி ரெட்டியின் மனைவிக்கு சீட் வழங்கியது என்பது அதிமுகவினருக்கே புரியாத புதிராக உள்ளது. எல்லாம் நன்மைக்கே என்பதை போல் ஜோதியை நிறுத்தியதன் மூலம் திமுகவுக்கு வெற்றியை அதிமுக இப்போது தேடி தந்து விட்டதாக திமுகவினர் கருதுகின்றனர்.

    English summary
    EX Minister Balakrishna Reddy's wife Jothi is going to compete in Hosur assembly constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X