சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னா சிரிப்பு என்னா சிரிப்பு.. கொஞ்சம் கூட டென்ஷனே இல்லையே இந்த பாலகிருஷ்ணனுக்கு!

பெண்ணை கொன்ற சம்பவத்தில் கைதான பாலகிருஷ்ணன் சிரித்தபடியே போஸ் தருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெருங்குடி கொலையில் திடீர் திருப்பம்! பரபர பின்னணி!- வீடியோ

    சென்னை: எதையோ வெட்டி முறிச்சி சாதிச்சு விட்டதை போல முகம் முழுசும் அப்படி ஒரு பூரிப்பு இந்த கொலைகார பாலகிருஷ்ணனுக்கு!

    15 நாளுக்கு முன்னாடி பெருங்குடி குப்பையில் பார்சல்களை பார்த்ததுமே போலீசார் ஆடிப்போய் விட்டார்கள். கை, கால்கள் மட்டும் துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்யப்பட்டதை பார்த்தால், கை தேர்ந்த கசாப்புக்காரர்கள், அல்லது மருத்துவ துறையை சார்ந்தவர்கள், அல்லது மாபியா கும்பலை சார்ந்தவர்களாக கூட இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக சொன்னார்கள். அந்த அளவுக்கு கனகச்சிதமாக பார்சல்கள் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் கசாப்புக்காரர், மருத்துவர், மாபியாவையும் தாண்டி சைக்கோக்களும் இருப்பார்கள் என்பதை நம் போலீசார் ஒரு கணம் யோசிக்கவில்லை. இப்போது பெண்ணை எப்படி கொன்றேன் என்று போலீசாரிடம் பாலகிருஷ்ணன் வாக்குமூலமாக அளிக்கப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சந்தியா போட்டோக்களுடன், கொலைகார பாலகிருஷ்ணன் போட்டோக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    முகத்தில் சிரிப்பு

    முகத்தில் சிரிப்பு

    இந்த போட்டோக்களில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு கொலையை செய்திருக்கிறோமே, அதிலும் இப்படி நாடே வாயை பிளந்து அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அளவுக்கு பக்காவாக பிளான் போட்டு கொடூரமாக கொன்றிருக்கிறோமே என்ற உறுத்தல் அந்த முகத்தில் பேருக்குகூட இல்லை. இரண்டு நாட்களாக சென்னை போலீசார்கள் செம டென்ஷனில் இருக்க, இந்த பாலகிருஷ்ணனோ சிரித்த மேனிக்கு போஸ் கொடுத்து கொண்டிருக்கிறார்.

    உடல்பாகங்கள்

    உடல்பாகங்கள்

    கொலைகள் பெரும்பாலும் ஒரு வினாடியில் எடுக்கப்படும் விபரீத முடிவாகத்தான் இருக்கும். அந்த வகையில் ஏதோ டென்ஷனில், அவசரத்தில் கொலை செய்துவிட்டார் என்றுகூட இந்த விஷயத்தை சொல்லமுடியாது. பொறுமையாக கொன்றிருக்கிறார், நிதானமாக உடல் பாகங்களை கூறு போட்டிருக்கிறார்.

    கட்டிய மனைவி

    கட்டிய மனைவி

    அங்கங்களை வெட்டி கச்சிதமாக பார்சல் செய்திருக்கிறார். இப்படி ஒரு நபர், அதுவும் கட்டிய மனைவியை கர்ண கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு பாலகிருஷ்ணனின் இயல்பான மனநிலைமைதான் என்ன? சைக்கோ என்று ஒற்றை வார்த்தையில் சொன்னாலும், சைக்கோவாக உருவாக என்ன காரணமாக இருக்கும்?

    சமுதாய சூழலா?

    சமுதாய சூழலா?

    இப்படி ஒரு சைக்கோவாக உருவாகி உள்ளார் என்றால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் இவரைவிட எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருப்பார்கள்? அரசியல், சினிமாவில் கிடைத்த தொடர் தோல்விகள் பாலகிருஷ்ணனை இந்த அளவுக்கு மனமாற்றம் செய்திருக்குமா? பெற்றோரின் வளர்ப்பு சரியில்லையா? சமுதாய சூழலா? இவற்றில் எது காரணம் என்றே உறுதியாக நமக்கு தெரியவில்லை.

    மனநல சிகிச்சை

    மனநல சிகிச்சை

    ஆனால் இது போன்றவர்களை நடமாட விடுவது ஆபத்தான ஒன்று. அத்துடன் உடனடியாக மனநல சிகிச்சை இவருக்கு தருவதும் அவசியம். என்னதான் மனநோயாளி, சைக்கோ என்று எளிதாக சொல்லிவிட்டாலும், இவ்வளவு கொடூரமான கொலை புராண காலத்திலும்கூட நடந்தது கிடையாது. இப்படி கேள்விப்பட்டதும் கிடையாது.

    எதுக்கு போஸ்?

    எதுக்கு போஸ்?

    ஆனால் கேட்டாலே நடுங்கி போகும் அளவுக்கு ஒரு கொலையும் செய்துவிட்டு, கொஞ்சமும் உறுத்தல், வருத்தம், கண்ணீர், சோகம், பயம், வெட்கம், அவமானம், இது எதுவுமே இல்லாமல் பாலகிருஷ்ணன் சிரித்து கொண்டே போஸ் கொடுப்பதைதான் சகிக்க முடியவில்லை.

    English summary
    Balakrishnan who has killed his wife Sandhya does not feel guilty.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X