சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'பாமகவை தடை செய்யுங்கள்..' 'இடப்பங்கீடு அவசியம்..' டுவிட்டரில் மாறி மாறி டிரெண்ட்

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் இன்று சென்னை உட்பட தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தால், சென்னையில் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இன்னொருபக்கம் பாமக கொடிகளை ஏந்திய சிலர் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலைதான் சமூக வலைத்தளங்களில் பாமக மற்றும் அதன் ஆதரவாளர்கள் இடப்பங்கீடு போராட்டம் என்ற பெயரில் ஹேஸ்டேக் ஒன்றை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை உதாரணமாகக் காட்டி, பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என்று, மற்றொரு தரப்பும் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறது. அப்படி என்ன சொல்கிறார்கள் இருதரப்பும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் - சென்னைக்கு வந்த பாமகவினரை தடுத்த காவல்துறைவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் - சென்னைக்கு வந்த பாமகவினரை தடுத்த காவல்துறை

சரியான வார்த்தை

இட ஒதுக்கீடு போராட்டம், அரசியல் பிரச்சினை அல்ல, உரிமை பிரச்சினை என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது மிகவும் சரியான வார்த்தை என புகழ்கிறார் இந்த நெட்டிசன்.

இட ஒதுக்கீடு அவசியம்

தனி நபர் வருமானத்தில் பின் தங்கியுள்ளது வன்னியர் ஜாதி என்றும், எனவே, 20 சதவீதம் இட ஒதுக்கீடு அவசியம் என்று கூறுகிறது இந்த பதிவு.

பாமகவிற்கு தடை

ஜெயலலிதா ஆட்சி காலத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மீது வழக்கு பாய்ந்தது குறித்து ஜெயலலிதாவே பேசிய வீடியோவை பதிவு செய்துள்ளார் இந்த நெட்டிசன். #BanPMK ஹேஷ்டேக்கில் இதை அவர் ஷேர் செய்துள்ளார். மேலும் வன்முறை தொடர்ந்தால் பாமகவுக்கு ஜெயலலிதா தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக அப்போது வெளியான செய்தித்தாள் செய்தி துணுக்கும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைம்

ரயில் மீது கல்வீசிய வீடியோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், பாமகவை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Ban PMK and reservation hastags are trending in twitter today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X