சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இளம் பெண்ணுக்கு முட்டியில் நடந்த ஆபரேஷன்.. கையை வைத்து அசிங்கமாக நடந்து கொண்ட அப்போலோ ஊழியர்!

தனியார்ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கண்ட கண்ட இடத்தில் கை வைத்ததும் சவுமிதாவுக்கு உயிரே போய்விடும் போல இருந்தது... ஒரு பக்கம் உயிருக்கு போராட்டம்.. மறு பக்கம் மானத்துக்கு போராட்டம்.. இரண்டிற்கும் நடுவே சிக்கி சின்னாபின்னமாக போனார் சௌமிதா!

சவுமிதாவுக்கு வயசு 30. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கால் முட்டியில் பிரச்சனை ஏற்பட்டது.

ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எங்கே நல்லா ஆபரேஷன் செய்வார்கள் என்று இணையத்தில் தேடினால், அப்பல்லோ ஆஸ்பத்திரி என்று தெரியவந்தது.

 சுவாச கருவி

சுவாச கருவி

அதனால் சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோவுக்கு ஆபரேஷனுக்கு போன 4 ந்தேதி வந்தார் சவுமிதா. 6 ந்தேதி ஆபரேஷன் செய்ய முடிவானது. அதற்காக இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் ஊசி போடப்பட்டது. முகத்தில் செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டது.

சவுமிதா

சவுமிதா

டாக்டர்கள் காலில் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில்தான் அந்த அசிங்கமான செயலில் ஈடுபட்டார் அந்த ஊழியர். லேப் டெக்னீஷியனான டில்லி பாபு என்பவர், சவுமிதா தலை பக்கம் நின்றுகொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் சவுமிதா.

 பாலியல் சீண்டல்

பாலியல் சீண்டல்

முகத்தில் சுவாச கருவி இருந்ததால் சவுமிதாவால் சத்தம் போட முடியவில்லை... ஸ்கிரீனுக்கு மறுபக்கம் டாக்டர்கள் இருந்ததால், இந்த கன்றாவிகளை அவர்களால் பார்க்கவும் வழி இல்லை. அந்த இளைஞனோ கண்ட கண்ட இடங்களில் கை வைத்து, இஷ்டத்துக்கு அந்த பெண்ணை சீண்டி கொண்டிருந்தான். எந்த வகையிலும் இதை தடுக்க முடியாமல் புழுவாய் துடித்து போனார் சவுமிதா.

நிர்வாகம்

நிர்வாகம்

ஆபரேஷன் முடிந்தது.. அந்த டாக்டர்களிடம் லேப் டெக்னீசியன் இப்படி தன்னிடம் நடந்துகொண்டார் என்று அழுதவாறே சொன்னார். ஆனால் இதை டாக்டர்கள் பெரிசாகவே எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. உடனே அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் முறையிட்டார். கண்டுகொள்ளவே இல்லை.. ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்தார். போலீசும் ஆஸ்பத்திரிக்கு விசாரணைக்கு வந்தது... ஆனால் சம்பந்தப்பட்ட பெண், மன நல சிகிச்சைக்காக வந்தவர்தான் என்று நிர்வாகம் சொல்லவும் போலீசும் அமைதியாக வெளியேறிவிட்டது.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

தனக்கு எந்த வகையிலும் யாராலும் உதவ அப்போலோ உதவ முன்வரவில்லை என்று தெரிய வந்த சவுமிதா.. வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கிவிட்டார். லேப் டெக்னீஷியன் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போகமாட்டேன், டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று சொல்லி ஆஸ்பத்திரியிலேயே உட்கார்ந்துவிட்டார்.

 காவல் ஆணையர்

காவல் ஆணையர்

திரும்பவும் ஆன்லைனில் போலீசுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீஸ், பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்தபோதுதான் ஆபரேஷன் விஷயம் தெரிய வந்தது. போலீசாரிடம் அந்த பெண் கதறி கதறி அழுததையடுத்து, விரிவான விசாரணை அறிக்கை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கெல்லாம் மொத்தம் 6 நாட்களாகி விட்டது. கடைசியில் குடியாத்தத்தை சேர்ந்த அந்த லேப்டெக்னீஷியனை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைத்தது.

 நியாயம்

நியாயம்

இந்தப் பெண்ணுக்கு நடந்த அக்கிரமத்திற்கு அப்போலோ மருத்துவமனைதான் நியாயம் தேடித் தந்திருக்க வேண்டும். அந்த லேப் ஊழியரை கைது செய்ய அப்போலோதான் உதவியிருக்க வேண்டும். ஆனால் அவரைக் காக்கும் வகையில் அப்போலோ நடந்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை, அதிர்ச்சியாகவும் உள்ளது.

English summary
In Perungudi Apollo Hospital, Lab Technician arrested over sexual harassment to woman patient
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X