பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தீவிரவாதிகள் பெங்களூரில் ஊடுருவலாம், ஐடி நிறுவனங்களை தாக்க திட்டமாம்.. போதும்ப்பா நிறுத்துங்க

Google Oneindia Tamil News

பெங்களூர்: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள், பெங்களூர் நகரில் ஊடுருவியதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக சுற்றும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று, இலங்கையின் பல்வேறு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Bangalore police denies hoax message on Sri Lanka terrorist

இந்த தாக்குதலில், இலங்கையின், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு நேரடி தொடர்பும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மறைமுக தொடர்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகளின் புகைப்படத்தை இலங்கை காவல்துறை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த தீவிரவாதிகளில் சிலர் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வசித்து வந்ததை பார்த்ததாக, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக போட்டோக்களுடன் செய்திகள் பரவி வருகின்றன.

அடுத்த 15 நாட்களுக்குள் பெங்களூரில், அதுவும் குறிப்பாக ஒயிட்பீல்டு மற்றும் பெல்லந்தூரு பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களில் பெரிய தாக்குதலை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று அந்த வாட்ஸ்அப் செய்திகள் தெரிவித்தன. இதை பெங்களூரு காவல்துறை மறுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பெயரில் பரவும் அறிக்கை.. நம்ப வேண்டாம் என முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுதலைப் புலிகளின் பெயரில் பரவும் அறிக்கை.. நம்ப வேண்டாம் என முன்னாள் போராளிகள் கோரிக்கை

இது தொடர்பாக பெங்களூர் சிட்டி போலீஸ் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இதுபோன்ற தகவல்கள் பொய்யானவை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பெங்களூர்வாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

English summary
Bangalore police denies hoax message, and request not to circulate forward such false messages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X