சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டி.டி.வி. தினகரன் மீது பெங்களூரு புகழேந்திக்கு அதிருப்தி? ஒதுங்குகிறாரா?

Google Oneindia Tamil News

சென்னை: அமமுகவை தனிக் கட்சியாக்க தினகரன் முடிவு செய்தது பெங்களூரைச் சேர்ந்த புகழேந்திக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் நேற்று மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக அமமுக பொதுச்செயலாளர் ஆகியுள்ளார் டி.டி.வி.தினகரன். சென்னை அசோக்நகரிக் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளர் ஆவது என முடிவெடுக்கப்பட்டது.

bangalore pugalenthi not happy with dinakaran decision over ammk

இந்த முடிவு அமமுகவின் மூத்த நிர்வாகிகளை அதிருப்தியடைய செய்துள்ளதாம். குறிப்பாக பெங்களூரு புகழேந்தி இப்போதைக்கு இந்த முடிவு வேண்டாம் என்ற ரீதியில் உள்ளாராம். அது குறித்து அவர் வெளிப்படையாகவே சொல்லியும் விட்டாராம்.

ஒசூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு நேற்று தேர்தல் முடிந்துள்ளதால் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என புகழேந்தி நினைக்கிறாராம். இருப்பினும் தினகரன் தனக்கே உரிய பாணியில் அதிரடி அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறார். இதனால் பெங்களூரு புகழேந்தி அதிருப்தி அடைந்துள்ளராம்.

பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம் பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்

சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. மேலும், தங்க தமிழ்ச்செல்வன் போன்றோர் தினகரன் செய்வது தான் சரியான நடவடிக்கை என்றும், அவர் போகும் ரூட் தான் கிளியர் ரூட் எனவும் சார்ட்பிகேட் கொடுத்துள்ளார்கள்.

அதிமுகவை கைப்பற்றுவது தான் தங்கள் முதல் இலக்கு என்றும், அதற்கான சட்டபூர்வ நடவடிக்கை இனி சசிகலா பேரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

English summary
Bangalore Pugalenthi is not happy with TTV Dinakaran for making AMMK as a political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X