சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்பார்ந்த வாடிக்கையாளர்களே.. ஆகஸ்ட் வந்தாச்சு.. வங்கிகளுக்கும் லீவு சொல்லியாச்சு.. மொத்தம் 16 நாள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தொடங்கும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 16 விடுமுறை நாட்கள் வருகின்றன. இவற்றில் நான்கு விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. இரண்டு நாட்கள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் வருகிறது. இதை தவிர்த்துப் பார்த்தால், 9 நாட்கள் விடுமுறையாக இருக்கும்.

மாத துவக்கத்திலேயே பக்ரித் நாள் வருவதால் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஞாயிறு, ஆகஸ்ட் 3 - ரக்ஷா பந்தன். ஆகஸ்ட் 8 - இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 9- ஞாயிறு, ஆகஸ்ட் 11 - ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, ஆகஸ்ட் 12 - ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, ஆகஸ்ட் 13 - இம்பால் தேசபக்தர்கள் தினம், ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 - ஞாயிறு, ஆகஸ்ட் 20 - ஸ்ரீமந்த சங்கரதேவ், ஆகஸ்ட் 21 - ஹரிட்டலிகா டீஜ், ஆகஸ்ட் 22 - கணேஷ் சதுர்த்தி, நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 23 - ஞாயிறு, ஆகஸ்ட் 29 - கர்மா பூஜை, ஆகஸ்ட் 31 - இந்திரயாத்ரா மற்றும் திருவோணம் ஆகிய நாட்கள் வருகின்றன.

Bank Holidays in August 2020: complete list

வங்கி விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது. ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் வருகிறது. இந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்கும். இது மாநிலங்களைப் பொறுத்து வேறுபடும்.

தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்திக்கு 11ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. மேலும், ஞாயிறு மற்றும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ATMல் இருந்து பணம் எடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. வழக்கம் போல் எடுத்துக் கொள்ளலாம். இனி வரும் மாதங்களில்தான் இந்துப் பண்டிகைகள் அதிகமாக வரும்.

Recommended Video

    Ludo Game அலப்பறைகள் • Cute Video | Funny Videos

     நீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.!! நீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.!!

    English summary
    Here is the complete list of bank holidays in August 2020 in Tamil. Bank Holidays in August 2020: complete list; When is Krishna Jayanthi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X