சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முழு லாக்டவுன்.. 10 நாட்களுக்கு வங்கிகளை மூட முதல் முறையாக உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முழு லாக்டவுனில் வங்கிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. லாக்டவுனில் வங்கிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Recommended Video

    Chennai உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் lockdown... அரசு அதிரடி அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நோய் தொற்று 31 ஆயிரத்தை தாண்டி 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.

    எனினும் அரசு தளர்வுகளை அளித்தவண்ணம் இருந்தது. தமிழகத்தில் 14-ஆவது நாளாக கொரோனா பாதிப்பு தினமும் 1000-த்தை தாண்டியுள்ளது. 2000-த்தை நெருங்கி வருகிறது.

    சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12நாட்கள் முழு லாக்டவுன்..முதல்வர் அறிவிப்பு.. முழு விவரம்சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12நாட்கள் முழு லாக்டவுன்..முதல்வர் அறிவிப்பு.. முழு விவரம்

    முழு ஊரடங்கு உத்தரவு

    முழு ஊரடங்கு உத்தரவு

    இந்த நிலையில் இன்றைய தினம் மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    கட்டுப்பாடுடன்

    கட்டுப்பாடுடன்

    எனினும் சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்து பணிகள். வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

    கருவூலத் துறை

    கருவூலத் துறை

    எனினும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செய்ல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, காவல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத் துறை, கருவூலத் துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

    அனுமதி

    அனுமதி

    மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும். கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை
    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள வேண்டும்.

    முதல் முறை

    முதல் முறை

    வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்), அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தில் வங்கிகள் மூடப்படுவது இதுவே முதல் முறை.

    English summary
    Tamilnadu orders to close all the Banks for 10 days in 4 districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X