ஒரே வருஷம்! 14ம் இடத்திலிருந்து சர்ரென 3ம் இடத்திற்கு வந்த தமிழ்நாடு! "தங்கத்தை" கொண்டாடும் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு கடந்த ஒரு வருடத்தில் தொழித்துறையில் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு டாப் சாதனையாளர் என்று பார்ப் (BARP) அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1 வருடமாக மீண்டும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து முதலீடுகள் அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட அரபு நாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் மூலம் சென்னையிலும் மீண்டும் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை போங்க..சரியாகும்! 5454 கிமீ பயணித்த தான்சானியா சிறுமி! டாக்டர்ஸ் செய்த மாயம்! இதான் தமிழ்நாடு

டாப் சாதனை
இந்த நிலையில்தான் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு டாப் சாதனையாளர் என்று பார்ப் (BARP) அறிக்கை தெரிவித்துள்ளது. பார்ப் என்பது BARP - Business Re- forms Action Plan என்று அழைப்பார்கள். மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு மாநிலத்தில் உள்ள பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு அங்கு தொழிற்துறை எப்படி உள்ளது என்ற ரேங்க் கொடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் முதலீடுகள் நன்றாக இருக்கிறதா என்பதை இந்த ரேங்க் மூலம் கண்டுபிடிக்க முடியும்

முதலீடுகள்
முதலீடுகள் செய்ய வசதியான சூழ்நிலை, நிலையான அரசு, முதலீடுகளை அரசு ஊக்குவிப்பது, சலுகை, பணியாளர்கள் இருப்பு, நில வசதி, சமூக ரீதியான மோதல்கள் இல்லாதது என்று பல காரணங்கள் அடிப்படையில் இந்த ரேங்க் கொடுக்கப்படும். மொத்தம் 15 பிரிவுகளில் 301 காரணிகளை சோதனை செய்து இந்த ரேங்கை கொடுப்பார்கள். அந்த வகையில் தமிழ்நாடு இந்த முறை 3ம் இடம் பிடித்துள்ளது.

3ம் இடம்
தொழில் செய்ய சாதகமான சூழ்நிலை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது. 2020ல் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்தது. அதன்பின் 2021ல் அதே இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3ம் இடத்திற்கு வேகமாக முன்னேறி உள்ளது. அதோடு தமிழ்நாடு 14ல் இருந்து 3ம் இடத்திற்கு வந்ததால், தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு டாப் சாதனையாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் இந்த டாப் சாதனையாளர் பட்டத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை இதற்காக பாராட்டி உள்ளார். தமிழ்நாடு பிஸ்னஸ் செய்வதில் டாப் சாதனையை படைத்துள்ளது. 14ம் இடத்தில் இருந்து 3ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளது. தங்கம் தென்னரசுக்கும், அவரின் டீமிற்கும் வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.