சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக்டவுன் நீக்கப்படும்வரை, பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்: முஸ்லீம் அமைப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். மேலும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் இயக்கங்கள் தலைவர்கள் தமிழக அரசை கேட்டு கொண்டது.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் நடைபெற்றது.

Basic facilities need for coronavirus suspects in Tamilnadu: Muslim organizations

இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு இந்த இயக்கங்களின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நமது வாழ்நாளில் இதுவரை காணாத கொடிய கொரோனா நோய் கிருமி முழு உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா எதிரொலியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் மருத்துவர்கள் உள்பட அனைத்து அரசு துறையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை நாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை

கொரோனா தொடர்பாக தமிழக அரசு நல்வாழ்வு துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது. கொரோனா நோய், அதன் பரவல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலியவை பற்றி சமூக வளைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல. எனவே கேட்டதையெல்லாம் ஆய்வில்லாமல் பரப்புவது ஒரு முஸ்லீமின் பண்பு அல்ல. இந்த அடிப்படையில் சமூக வலைத்தளங்களில் வருபவை அனைத்தையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனாவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் கீழே கையொப்பமிட்டுள்ள அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற 7373736085 என்ற கொரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த எண்ணில் பதிவு செய்யும் தகவல்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகள் நீக்கப்பட வழி வகை காண்பதற்கு இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டனர். இதில் கொரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி வருகின்றனர். இச்சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அம்மாவட்ட ஆட்சியர்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூலம் கண்ணியமாக எவ்வித பதட்டத்திற்கும் வழிவகுக்காமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் பணியினை திறம்பட மேற்கொண்டு வருகின்றனர். இதே சிறப்பான வழிமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சில அரசு மருத்துவமனைகளில் சரியான குடிநீர் வசதி செய்துக் கொடுக்கப்படவில்லை என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது என்றும் கைதிகளை போல் எங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றும் புகார்கள் வந்துள்ளதை வருத்தத்துடன் பதிவுச் செய்கிறோம்.

மேலும் மருத்துவ பரிசோதனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்டவர்களும் பாதிக்கப்படாதவர்களும் ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களிடையே பீதியையும் பதட்டதையும் ஏற்படுத்தியுள்ளது. இதே போல், ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மிக பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் வந்துள்ளது. இந்த மோசமான அவல நிலை போர்கால அடிப்படையில் நீக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களுக்கு பரிசோதனை அறிக்கை அளிக்கப்படுவதில்லை. இது அவர்களுக்கு மிக பெரும் மன உளைச்சலை அளித்து வருகின்றது. இதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் கசிய விடப்படுகிறது. இது மருத்துவ அறத்திற்கும் மனிதநேயத்திற்கும் முரணானதாகும். அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்துக் கொள்ளவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த குறையை நீக்கும் வகையில் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் ஒரு பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர் உள்ளார் என்ற தகவல் அங்குள்ள உள்ளாட்சி மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தேவையற்ற பதட்டத்தை அப்பகுதியில் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையை நீக்குவதற்கும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Recommended Video

    How technology helps Tamilnadu in Contact tracing method so far?

    சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் மீது புகாரின் அடிப்படையில் சிலர் மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதே நேரத்தில் சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    English summary
    We ask the Government of Tamil Nadu to provide basic facilities to those who are suspected of being infected for coronavirus, says Muslim organizations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X