• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஒரு கட்டிடத்தால் வந்த கலாட்டாவா?.. தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு பின்னணியில் புது தகவல்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நட்சத்திர தம்பதி தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவிற்கு பத்திரிகையாளரும் கலைத் துறையைச் சேர்ந்தவருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியிடையே பிரிவு ஏற்பட்டதற்கு நெட்டிசன்கள் பல்வேறு தரப்பு காரணங்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் எது நிஜம் என தெரியவில்லை.

4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு! 4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.. ஓமிக்ரானை தடுக்க முடியாமல் திணறிய வேக்சின்கள்.. இஸ்ரேல் பரபர ஆய்வு!

இந்த நிலையில் இந்த தம்பதி பிரிந்தது ஏன் என்பது குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் செய்தி சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் நிறைய தகவல்களை கொடுத்துள்ளார்.

காதல்

காதல்

அவர் கூறுகையில் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் காதல் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இதை ஏன் உண்மையாக்கக் கூடாது என நினைத்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்ததாக ரஜினியே தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே கஸ்தூரி ராஜாவுக்கும் ரஜினிகாந்திற்கும் பேச்சுவார்த்தை இல்லை. இருவரும் வாய் வார்த்தைக்கு கூட பேசிக் கொள்ள மாட்டார்களாம்.

குலத் தெய்வம் கோயில்

குலத் தெய்வம் கோயில்

அது போல் தனுஷ் வீட்டு குடும்ப விழாக்களில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவே மாட்டாராம். அடிக்கடி குலத்தெய்வம் கோயிலுக்கு செல்லும் வழக்கம் கொண்ட தனுஷ், ஐஸ்வர்யாவை அழைத்தாலும் வருவதில்லையாம். தேனியில் உள்ள கஸ்தூரி ராஜாவுக்கு சொந்தமான தியேட்டரின் பெயரில் அவர் கடன் பெற்றிருந்தார். அந்த கடனை அடைக்க முடியாமல் திணறிய போது கடன் கொடுத்தவர் கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

பூமி பூஜை

பூமி பூஜை

அப்போது நான் ரஜினிகாந்தின் சம்பந்தி என கஸ்தூரி ராஜா கூற, அதற்கு மறுநாளே ரஜினி, கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பிரஸ்மீட்டில் அறிவித்தாராம். இது தனுஷ் குடும்பத்தினரை கலங்க வைத்துவிட்டதாம். அது போல் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் தன் கண் முன்னால் மகள் இருக்க வேண்டும் என்பதால் போயஸ் தோட்டத்தில் ஒரு இடம் வாங்குமாறு தனுஷுக்கு ரஜினி அறிவுறுத்தி அங்கு பூமி பூஜை போடப்பட்டு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

3 படம்

3 படம்

அந்த இடம் வாஸ்துபடி சரியில்லை என ரஜினி கூறினாராம். எனவே வேறு இடம் பார்க்குமாறு கூறியதை தனுஷ் கேட்காமல் தான் வாங்கிய இடத்திலேயே கடட்டம் கட்டி வருகிறாராம். வாஸ்து என்ற விவகாரம் தொடர்பாக அன்று ரஜினி சொன்னதை உண்மையாகிவிட்டது இந்த தம்பதிக்குள்ளான பிரிவு. 3 படத்தை ஐஸ்வர்யா இயக்கிய போது நஷ்டம் ஏற்பட்டதாம். அதையும் ரஜினியிடம் கேட்காமல் தனுஷே சமாளித்தாராம்.

  Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
  அப்பா மகளானாரா ஐஸ்வர்யா?

  அப்பா மகளானாரா ஐஸ்வர்யா?

  எல்லாவற்றுக்கும் மேல் தன் குடும்பத்தை பார்க்காமல் எப்போது பார்த்தாலும் ரஜினியுடன் மருத்துவமனை செல்வது , ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்பாவை கவனித்து கொள்வது என ஐஸ்வர்யா அப்பா பெண்ணாக இருப்பதும் தனுஷுக்கு பிடிக்கவில்லையாம். இதெல்லாம் சிறுக சிறுக புகைந்து பெரியதாக வெடித்து விட்டதாக சொல்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

  English summary
  Bayilvan Ranganathan reveals about separation of Dhanush and Aiswaryaa. He also conveys so many infos.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  Desktop Bottom Promotion