சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில், பி.சி.ஜி தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பி.சி.ஜி தடுப்பூசி வயதான நபர்களில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BCG vaccination beneficial against Covid-19 infection for elderly: ICMR

"தொடர்ச்சியான ஆய்வில், வயதானவர்களில் மொத்த ஆன்டிபாடி உற்பத்தியை பி.சி.ஜி தடுப்பூசி தூண்டுகிறது என்பதை கண்டறிந்துள்ளோம்" என்று ஐசிஎம்ஆர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளது.

பி.சி.ஜி தடுப்பூசி ஆரோக்கியமான வயதான நபர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா என்பது பற்றி இங்கிலாந்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

காச நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி உதவுகிறது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது என்று, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால், இயல்பாகவே கொரோனா பரவல் கட்டுப்படுகிறது.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், பிசிஜி மருந்தின் பலன்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இருப்பினும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. உலகம் முழுக்க கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் 2021ம் ஆண்டு பிறந்த பிறகுதான், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
A study conducted by the Indian Council of Medical Research (ICMR) has found out that Bacillus CalmetteGuérin (BCG) vaccination can be beneficial for elderly individuals in tackling novel coronavirus infection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X