சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Exclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

beela rajesh ias explains, Precaution against corona virus infection

இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஒன் இந்தியா தமிழ் சார்பில் அந்த துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.ஸிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

'' கொரோனோ வைரஸ் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்கள், சீன வழியாக வேறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர உடற்பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான பிரத்யேக டீம் விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது''.

''சென்னை மட்டுமல்லாமல் கோவை,திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களிலும் கொரோனோ அறிகுறி தொடர்பாக தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் முறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் சென்னை துறைமுகத்திலும் சுகாதாரத்துறை சார்பாக பரிசோதனை செய்யப்படுகிறது''.

''ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பின் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சையை தொடங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 3 பேர் தமிழகத்திற்கு வந்து, கொரோனோ வைரஸை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து சென்றுள்ளனர்.''

English summary
beela rajesh ias explains, Precaution against corona virus infection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X