சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீபாவளிக்கு முந்தைய, பிந்தைய நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிப்பு.. சோகத்தில் மாணவர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகை ஒரு நாள் கொண்டாட்டம் தான் என்றாலும், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டம் களை கட்டும். வெளியூர்களில் உள்ளவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் நண்பர்களோடு உறவுகளோடு இனிமையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள்.

Before Diwali day, after diwali days of school work days in tamil nadu

இந்த கொண்டாட்டம் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தொடங்கி தீபாவளி பண்டிகைக்கு மறு நாள் வரை நீடித்திருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மிகப்பெரிய இன்பமயமான நாட்கள் ஆகும். இந்நிலையில் அக்டோபர் 27ம் தேதி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு குழந்தைகளுடன் இரண்டு நாள் முன்பே அல்லது ஒரு நாள் முன்பே செ டிக்கெட் புக்கிங் செய்துவிட்டார்கள்.

நாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்!நாட்டில் மொத்தமே ஐந்து மாநிலங்கள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாம்!

இந்த சூழலில் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய நாளும் , பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து மட்டுமல்ல, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்ப்பர்கள் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வது கடினம் ஆகிவிடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே மாணவர்களும் விடுமுறை இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்கள்.

English summary
Before day of diwali, after diwali day as school work days in tamil nadu, people worry for not announced leave
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X