சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் இருந்த இடம்.. பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்.. புதிய உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து சென்னை துறை முகத்தில் உள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டை மூன்று நாளில் ஏலத்தில் விட வேண்டும் என்று மாசு கட்டப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

Recommended Video

    Chennai Port-ல் 6 ஆண்டுகளாக இருக்கும் Ammonium Nitrate | Oneindia Tamil

    லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் தீ பிடித்து எரிந்ததால் மிக பயங்கரமான விபத்த நடந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியாவிட்டனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்தன. சுற்றியுள்ள பகுதி முழுவதும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.

    இந்த விபத்தையடுத்து இந்தியாவில் எந்த துறைமுகத்தில் எல்லாம் அமோனியம் நைட்ரேட் உள்ளது என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து, 20 கி.மீ தொலைவில், ஐந்து வருடங்களாக 740 டன் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பபாக வைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

    முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது?முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது?

    அகற்ற வேண்டும்

    அகற்ற வேண்டும்

    தனியாருக்குச் சொந்தமான கிடங்கில் அமோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டிருந்த கூறிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசு உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கடந்த 2015 ம் ஆண்டு 740 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை கரூரைச் சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் இறக்குமதி செய்திருப்பது பின்னர் செய்திகளில் தெரியவந்தது.

     அம்மன் கெமிக்கல்

    அம்மன் கெமிக்கல்

    அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய வேண்டுமானால், மத்திய அரசின் தொழில்துறை கட்டுப்பாட்டில் வரும் வெடிபொருள்கள் தலைமைக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து `பி 5' லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால், அம்மன் கெமிக்கல் நிறுவனத்திடம் `பி 3' லைசென்ஸ் மட்டுமே இருந்திருக்கிறது. அந்நிறுவனம் `பி 5' லைசென்ஸுகாக விண்ணப்பித்திருந்தபோது, ஏற்கெனவே அவர்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சென்னை துறைமுகம் வந்துவிட்டது. லைசென்ஸ் இல்லாததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்து, 37 கண்டெய்னர்களில் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த 740 டன் அமோனியம் நைட்ரேட், மணலியிலுள்ள சத்வா ஹைடெக் கிடங்கில் வைக்கப்ட்டிருக்கிறது.

    பாதுகாப்பு குறித்து ஆய்வு

    பாதுகாப்பு குறித்து ஆய்வு

    மிக அபாயகரமான மற்றும் எளிதில் தீ பிடிக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இப்படி ஐந்து வருடமாக இருக்கும் தகவல் பெய்ரூட் விபத்தை தொடர்ந்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் தலைவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., உடனடியாக அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்குக்கு நேரில சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் இதை அப்புறப்படுத்துமாறு சுங்க அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம்

    மாசு கட்டுப்பாட்டு வாரியம்

    இதற்கிடையே அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ள கிடங்கைச் சுற்றி இரண்டு கி.மீ தூரத்துக்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என சுங்கத்துறை விளக்கமளித்தது. சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த மணலி கிடங்கிற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கிடங்கைச் சுற்றிலும் சுமார் 12,000 மக்கள் வசிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .மூன்று நாள்களில் 740 டன் அமோனியம் நைட்ரேட்டும் ஏலத்தில் விடப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    English summary
    Pollution Control Board authorities order to re locate ammonium nitrate from chennai goodown due to beirut blast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X