சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2018ஐ கலக்கிய இரு பெரும் தலைவர்கள்.. வேற யாருமல்ல.. இவங்களை சொல்லலாம்!

இந்த ஆண்டின் சிறந்த தமிழக தலைவர்கள் யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    2018-ஐ கலக்கிய இரு பெரும் தலைவர்களாக இவங்களை சொல்லலாம்!- வீடியோ

    சென்னை: எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்கப்பா... என்று சொல்லும் அளவுக்கு அரசியலில் பெயர் வாங்குபவர்கள் 2 பேர்! ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மற்றொருவர் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!

    அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இவர்கள் இருவரின் செயல்களை பார்த்தோமானால், அதீத வளர்ச்சி என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

    3 வருடங்களுக்கு முன்பு தமிழிசை இப்படி கிடையாது. இந்த அளவுக்கு துணிச்சலான பேச்சோ, தில்லான ட்வீட்களோ, பதிலுக்கு பதில் பேட்டிகளோ அவரிடத்தில் அவ்வளவாக தென்பட்டதில்லை. ஆனால் சமீப காலமாகவே தமிழக அரசியல் தலைவர்களிலேயே ரொம்ப பிசியான தலைவராகி விட்டார் தமிழிசை. எதிரே நிற்பது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, நறுக் நறுக்கென்று பேட்டிகளை தருகிறார்.

    தாமரை மலருமா?

    தாமரை மலருமா?

    இவரது பேச்சையும், பேட்டியையும் கண்டால், ஆர்.கே. நகரில் டெபாசிட்கூட வாங்க முடியாத கட்சி இவருடையது என்று சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. மலர்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்தை நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார் தமிழிசை. இவரிடம் வறுபடும் தலைவர்களில் வைகோவும் ஒருவர்.

    கண்ணியம் நிறைந்த பேச்சு

    கண்ணியம் நிறைந்த பேச்சு

    இந்த அளவுக்கு தமிழிசை பேசுவார் என்றோ, துணிச்சலுடன் எல்லாவித விமர்சனத்தையும் எதிர்கொள்வார் என்றோ 3 வருடங்களுக்கு முன்பு நம் மக்களுக்கு தெரியாது. ஆனால் எவ்வளவு காரசார பேச்சு, ட்வீட்கள் என்றாலும் தன்னுடைய கண்ணியத்தில் இருந்து ஒருபோதும் தமிழிசை தவறுவது இல்லை. யாராக இருந்தாலும் மரியாதை தரும் பழக்கம் சின்ன வயசில் இருந்தே புகட்டப்பட்டதால், அந்த நாகரீகம் இன்றும் தொடர்கிறது.

    அடி மேல் அடி

    அடி மேல் அடி

    அதேபோல, டிடிவி தினகரன்!! இவர் ஏற்கனவே அதிமுகவில் பொறுப்பில் இருந்தவர், எம்.பியாக இருந்தவர். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு அங்கீகாரம் இப்போது மக்களிடையே கிடைத்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவரது அணுகுமுறைதான். ஆர்.கே.நகர் தேர்தலிலிருந்தே இவரை தமிழக மக்கள் தினந்தோறும் பார்த்துதான் வருகிறார்கள். ஜெயலலிதா இறந்து இந்த 2 ஆண்டுகளில் பல கஷ்டங்களை பட்டுவிட்டார் தினகரன். அது சொத்துகுவிப்பு வழக்கு, திகார் சிறை, 18 எம்எல்ஏக்கள் வழக்கு தீர்ப்பு, என எல்லாமே அடி மேல் அடிதான்.

    பிளஸ் பாயிண்ட்

    பிளஸ் பாயிண்ட்

    ஆர்.கே. நகர் வெற்றி தவிர இதுவரை இவர் பெற்றது எல்லாமே தோல்வி முகம்தான். ஆனாலும் செய்தியாளர்கள் சந்திப்பு முதல் டிவி பேட்டிகள் வரை முகத்தில் எந்த வித கோபம், வெறி, ஆத்திரம், வன்மம், டென்ஷன் இது எதையுமே காட்டாமல் சிரித்த முகத்துடனே டிடிவி பதிலளிப்பதுதான் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது.

    மிஸ்டர் கூல்

    மிஸ்டர் கூல்

    கோ போன்ற பெரிய தலைவர்களிடம் கூட இல்லாத அணுகுமுறை இது. இதனால்தான் இவர் " மிஸ்டர் கூல்" என்று கூட அரசியல் வட்டாரத்தில் அழைக்கப்பட்டுள்ளார். இவரது சிரிப்பை ஒருமுறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்தபோதுகூட, "வெளியில் சிரித்த முகத்துடன் காணப்படும் டிடிவி தினகரன், உள்ளே மிருகத்தனமான குணங்களை உடையவர்" என்றார்.

    சமாளிக்க முடியவில்லை

    சமாளிக்க முடியவில்லை

    ஒருமுறை முதல்வர் பேசும்போது, ஒரு தினகரன் என்ன, ஆயிரம் தினகரன் வந்தாலும் நாங்கள் சமாளிப்போம் என்றார். இதற்கு பதிலடி தந்த டிடிவி, "முதலில் இந்த ஒரு தினகரனை அவர்கள் சமாளிக்கட்டும், என் ஒருவனுக்கே அவர்களால் பதில் சொல்ல முடியவில்லையே" என்றார். உண்மைதான், ஆளும் தரப்பில் தினகரனை எந்த விஷயத்திலுமே சமாளிக்கவும் முடியவில்லை, எதிர்த்து விமர்சிக்கவும் முடியவில்லை.

    சபாஷ் போடலாம்

    சபாஷ் போடலாம்

    இதற்கு காரணம் என்னவாக இருந்தாலும், டிடிவியின் தைரியம்தான் எல்லாருக்கும் கண் முன்னே வந்து நிற்கிறது. பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கையாள்வது, வார்த்தைகளை அள்ளி கொட்டி விடாமல் பேட்டிகளை தருவது, என தெளிவாக இருக்கிறார். எனவே தமிழிசை ஆகட்டும், டிடிவி ஆகட்டும், குப்புற விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்றாலும் அதை நாசூக்காக எதிர்கொள்ளும் அணுகுமுறைக்கு சபாஷ் போடலாம்.

    English summary
    BJP State President Tamizhisai Soundarajan, and AMMK TTV Dinakaran are the best TN Political Personalities of the year 2018.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X