For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர் பண்டிகையாம் பொங்கல்.. உங்கள் உறவினர்களுக்கு வாழ்த்து சொல்வது எப்படி? இதோ செம பட்டியல்!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து சொல்ல அழகான பொங்கல் வாழ்த்து பட்டியல் இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து சொல்ல அழகான பொங்கல் வாழ்த்து பட்டியல் இதோ!

தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை நாளை போகியோடு தொடங்குகிறது. ஜாதி மதம் கடந்த தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

அதனால்தான் பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுக்க வேறு நாடுகளில் இருக்கும் பிற தமிழர்களும் கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகை விவசாயத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். தூரத்து சொந்த்தின் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு குடும்பமாக எல்லோரும் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல்.

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil

தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையின் படி, போகியுடன் தொடங்குகிறது இந்த பொங்கல் பண்டிகை.

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பொங்கல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்களும் தனி தனியாக நிறைய சிறப்புகளை கொண்டுள்ளது. போகி அன்று பழைய பொருட்கள் வீட்டில் இருந்து அகற்றப்படும்.

பொங்கல் அன்று சூரியனை வேண்டி மக்கள், பொங்கல் சமைப்பார்கள். விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு மக்கள் நன்றி செலுத்துவார்கள். அதன்பின் விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு மறுநாள் அன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். காணும் பொங்கல் அன்று மஞ்சள் தண்ணீர் தெளித்து மக்கள் கொண்டாடுவார்கள்.

வரலாற்று ரீதியாக தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே பொங்கலை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. தை மக்களை வரவேற்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மகள் வந்தால் போதும் வாழ்வு செழிக்கும், வளம் கொழிக்கும் என்பார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பவர்கள். அப்படிப்பட்ட தை மகளை அழகான வாழ்த்தோடு வரவேற்பது தானே அழகாக இருக்கும். ஆம், இந்த தை ஒன்றை முன்னிட்டும், பொங்கலை முன்னிட்டு உங்கள் உறவினருக்கு அழகாக வாழ்த்து தெரிவித்து பொங்கல் பண்டிகையை அழகு சேர்த்திடுங்கள்.

பின் வரும் பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

1. நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு தமிழர்களுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம். பொங்கல் நல்வாழ்த்துகள்.

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil

2. பொங்கல் அன்று நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட !அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !!!

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil

3. இந்த தைத் திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil

4. இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ... பொங்கல் வாழ்த்துகள்!

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil

5. தமிழர் மரபு காக்கவும், பாரம்பரியம் போற்றவும் பொங்கல் வாழ்த்துகள்

Happy Pongal Wishes, Messages, Quotes, Whatsapp Status in Tamil
English summary
Pongal Wishes in Tamil: Find the collection of pongal festival wishes, images, quotes, whatsapp status, SMS messages and much more in tamil only at Tamil Oneindia. பொங்கல் வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், எஸ்.எம்.எஸ் வாழ்த்து செய்திகள் என பொங்கல் பண்டிகை தொடர்பான வாழ்த்து செய்திகளை இந்த பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X