சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாரத் பந்த்: தமிழகத்தில் எதிர்கட்சியினர் நிலை என்ன? பஸ், ரயில்கள் ஓடுமா?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளை பாரத பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் பஸ், ரயில்கள் இயக்கப

Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத பந்த் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெற செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாரத பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், மாநகர மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் நாளை இயங்கும். சென்னையில் 3 ஆயிரம் மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது. அவை அனைத்தும் நாளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Bharat Bandh tomorrow: Transport services may be affected in TamilNadu

நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 11 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் சிங்குவா, அவுசாண்டி, பியா மனியாரி, மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை 44-ன் இருபுறமும் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக லாம்பூர், சஃபியாபாத், சபோலி எல்லைகள் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 5 தடவை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. இதையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி மீண்டும் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைப்புகள் நாளை டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய முழு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா, ஆம்ஆத்மி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 18 கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான கூட் டணி கட்சிகள் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடு தழுவிய போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

வட மாநிலங்களில் இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதில்லை என்று கம்யூனிஸ்டு அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஆனால் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

Bharat Bandh tomorrow: Transport services may be affected in TamilNadu

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பஸ்கள் வழக்கமாக இயக்கப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாததால் சேவை குறைக்கப்பட்டுள்ளது. பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், மாநகர மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் நாளை இயங்கும். சென்னையில் 3 ஆயிரம் மாநகர பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது. அவை அனைத்தும் நாளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நமது உணவு வீரர்கள்....போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் நமது உணவு வீரர்கள்....போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா

அனைத்து போக்குவரத்து கழகத்தில் இருந்தும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் முழுமையாக பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுப்பில் இருக்கும் தொழிலாளர்களையும் பணிக்கு உடனே திரும்புமாறு கிளை மேலாளர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வழக்கமான நேரத்திற்கு இயக்கப்படும். நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேவை அளிக்கப்படும்.

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது, பொது வேலைநிறுத்தம் காரணமாக நாளை பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படும். மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை தொடரும் என்றார்.

நாளை நாடு தழுவிய பாரத் பந்த்... தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு!நாளை நாடு தழுவிய பாரத் பந்த்... தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு!

முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல் நாளை இயக்கப்படுகிறது. வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் புறப்பட்டு செல்லும். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காரணத்தால் மட்டுமே சேவை ரத்து செய்யப்படும்.

போராட்டங்களுக்காக ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்த வாய்ப்பு இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மின்சார ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருப்பதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையடுத்து நாளை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களை வழக்கம் போல இயக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

English summary
Opposition parties are planning to win the Bharat Bandh protest called by the farmers in Tamil Nadu. The Government of Tamil Nadu has made all precautionary measures to ensure that the normal life of the people is not affected by the Bharat Bandh struggle. A senior official of the Transport Corporation said that all government buses would be operated in such a way that the normal life of the people would not be affected by the general strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X