சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முண்டாசு கவிஞனின் தலைப்பாகையில் காவி.. எதேச்சையானதா.. அல்லது??

Google Oneindia Tamil News

சென்னை: பஞ்சாயத்துகள் எந்த ரூபத்திலிருந்து வரும் என்றே எதிர்பார்க்க முடியவில்லை. எந்தெந்த ரூபத்தில் எல்லாம் வருது பாருங்கன்னு அயர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இப்போது பாரதியாரின் தலைப்பாகையை வைத்து ஒரு பஞ்சாயத்து ஓட ஆரம்பித்துள்ளது. மகாகவி பாரதியார்தான் செத்துப் போயிட்டாரே.. அவரை வச்சு என்ன பஞ்சாயத்து என்ற கேள்வி வரலாம். உண்மைதான், ஆனால் அவரது புகைப்படத்தை வைத்துத்தான் இப்போது பிரச்சினையே.

12ம் வகுப்பு பொதுத் தமிழ் பாடப் புத்தகத்தின் அட்டைதான் சர்ச்சையாகியுள்ளது. அதில் பாரதியார் படம் வரையப்பட்டுள்ளது. அந்தப் படத்தால்தான் சர்ச்சையே கிளம்பியுள்ளது.

தேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடிதேசபக்தியாளர்களே.. தமிழ்தான் சுத்தமான மொழி.. அதை படிங்க.. இந்தி நடிகர் அதிரடி

பாரதியார்

பாரதியார்

புத்தகத்தின் அட்டையின் இடது ஓரம் ஒரு நடனப் பெண்மணியின் படம் உள்ளது வலது புறம் இன்னொரு நடனக்காரர். நடுவில் பாரதியார். முகம் தெரியாமல் தலைப்பாகையுடன் பாரதி காணப்படுகிறார். அவரது அடையாளமான முறுக்கு மீசை தெளிவாக தெரிகிறது.

காவி நிறம்

காவி நிறம்

வழக்கமாக பாரதியாரின் தலைப்பாகை வெள்ளையில்தான் இருக்கும். நீண்ட வெண் துணியால்தான் அவர் தலைப்பாகை அணிவார். ஆனால் இதில் ஆரஞ்சு அல்லது காவி கலரில் தலைப்பாகை உள்ளது. இதுதான் விவாதத்தை கிளப்பியுள்ளது.

தேசிய கொடி

தேசிய கொடி

பாரதியாரின் தலைப்பாகை ஏன் காவியாக உள்ளது. இது பாஜகவின் திட்டமிட்ட திணிப்பா என்று சிலர் கிளம்பியுள்ளனர். இன்னும் சிலரோ இல்லை இல்லை படத்தை நன்றாகப் பாருங்கள்.. தேசியக் கொடியின் மூவண்ணம் தெரியும் என்கிறார்கள். உற்றுப் பார்த்தால் தெரியத்தான் செய்கிறது.

நிற திணிப்பு?

நிற திணிப்பு?

ஆனாலும் பாரதியாரின் அடையாளத்தை மறைத்து ஏன் காவி நிறம். இதைத் தவிர்த்திருக்கலாமே என்று சூடான வாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் மத்தியில் ஏன் இந்த நிறத் திணிப்பு என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

இருப்பினும் பாடப் புத்தகத் தயாரிப்புப் பணிகளில் தொடர்புடைய ஆசிரியர்கள் கூறுவது என்னவென்றால் இதில் யாருடைய தலையீடும் இருக்க வாய்ப்பில்லை. படம் வரைந்த ஓவியர்தான் இதுபோல வரைந்திருப்பார். அவர் மூவண்ணத்தை நினைத்து வரைந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

மொத்தத்தில் இது இப்போது சூடான விவாதமாக மாறியுள்ளது.

English summary
Poet Mahakavi Bharathyiars controversy image in Plus two Tamil book design
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X