சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரை இரண்டாக பிரித்த "சூப்பர்" ஸ்டார் அமித்ஷா.. ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajini Praises Amit shah | காஷ்மீரை இரண்டாக பிரித்த அமித்ஷா..ரஜினிகாந்த் அதிரடி பாராட்டு!

    சென்னை: காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன், காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தமாக இது வெளியாக இருக்கிறது.

    சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. பல முக்கிய தலைவர்களுடன் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.

    திடீரென சென்னைக்கு வந்த அமித் ஷா.. இரவோடு இரவாக சந்தித்த முதல்வர்.. 15 நிமிடம் ஆலோசனைதிடீரென சென்னைக்கு வந்த அமித் ஷா.. இரவோடு இரவாக சந்தித்த முதல்வர்.. 15 நிமிடம் ஆலோசனை

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த புத்தகத்தை வெளியிட்டார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    அதே போல் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்து தள்ளினார். காஷ்மீர் விவகாரம் குறித்தும் ரஜினிகாந்த் பேசியது பெரிய வைரலாகி உள்ளது .

    என்ன பேச்சு

    என்ன பேச்சு

    நடிகர் ரஜினிகாந்த் தனது பேச்சில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். மிக முக்கியமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள்.

    அழகு

    அழகு

    ஆனால் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்று நான் சொல்ல மாட்டேன். அது அவர்களுக்குத்தான் தெரியும். அமித் ஷா லோக்சபாவில் மிக அழகாக பேசினார். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. காஷ்மீர் பிரச்னையை அமித் ஷா மிக நேர்த்தியாக கையாண்டார். மிக கடினமான பிரச்னையை அவர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர்.

    என்ன உழைப்பு

    என்ன உழைப்பு

    எந்நேரமும் மக்கள் பற்றி நினைப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. மக்களுக்காக தொடர்ந்து அவர் உழைத்து வருகிறார். வெங்கய்ய நாயுடு முற்றிலுமாக ஆன்மிகவாதி; அவர் தவறுதலாக அரசியல் தலைவரானது ஆச்சர்யம் அவரின் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி என்று, ரஜினிகாந்த் தனது பேச்சில குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Bifurcation of Jammu Kashmir is a great move says Rajin Kanth in a book release function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X