சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோனி வருகிறார்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா.. பிரம்மாண்டம்

தோனி, முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்து கொள்கின்றனர்

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடக்கிறது.. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்கிறார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது..

Recommended Video

    Operation Thamarai | கடுப்பான Bihar CM Nithish Kumar*Politics

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, போட்டிகளை தொடங்கிவைத்தார்...

    அரசு அதிரடி.. இன்று மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளுக்கும் லீவு..! அரசு அதிரடி.. இன்று மொஹரம் பண்டிகையொட்டி பொது விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளுக்கும் லீவு..!

    ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்

    ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்

    அன்றைய தொடக்க விழாவில், தமிழர்களின் வரலாற்றை விளக்கி நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது... தமிழகத்தின் பண்பாடும், கலாச்சாரமும், பாரம்பரியமும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில மக்களை ஒரே நாளில் ஈர்த்தும்விட்டது.. அதைத்தொடர்ந்து அன்று முதல் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    பதக்கங்கள்

    பதக்கங்கள்

    அதனால், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் பதக்க வாய்ப்பை உறுதி செய்யும் என்பதால், வீரர், வீராங்கனைகள் கவனமாக செயல்பட்டு வருகின்றனர்.... அவர்களுக்கான தேவையான வசதிகளை தமிழக அரசு முன்னின்று செய்து கொண்டு வருகிறது.. அதேசமயம், கடந்த சில தினங்களாகவே, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழாவிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    பிரம்மாண்டம்

    பிரம்மாண்டம்

    தொடக்க விழா எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்ததோ, அதே போல நிறைவை விழாவையும் நடத்தி காட்ட மும்முரமாகி வருகிறது.. எனவே, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக இந்த நிறைவு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.. இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது... விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையேற்று, வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்..

    தோனி

    தோனி

    இந்த நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கலந்து கொள்வதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பும், ஆர்வமும், கூடி உள்ளது.. அதேபோல, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். மேலும், 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன...

    செஸ் காய்கள்

    செஸ் காய்கள்

    இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது... கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட பெரிய ஸ்கிரீன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசி நாள் என்பதாலும், முதல்வர் தன் கையாலேயே விருதுகளை வழங்க உள்ளதாலும், தோனி கலந்து கொள்வதாலும் இந்த நிறைவு விழா மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.

    English summary
    big and happy closing ceremony of the chess olympiad will be held this evening at the nehru indoor stadium chennai தோனி, முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கலந்து கொள்கின்றனர்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X