சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பான டைம்.. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள்.. வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை; டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Recommended Video

    இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முடியாமல் இப்போது வரை தொடர்ந்து தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

    எதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே!.. வெதர்மேன்எதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே!.. வெதர்மேன்

    கடலூரில் மழை

    கடலூரில் மழை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்களில் வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்யும் என்றார்.

    மிதமான மழை

    மிதமான மழை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் மேற்கு நோக்கி நகரும்போது, தெற்கு, உள் தமிழகம்., மேற்கு தமிழகம் பகுதியிலும் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்திலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்றும் கூறியிருந்தார்

    டெல்டாவில் வெளுக்கும்

    டெல்டாவில் வெளுக்கும்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள வெதர்மேன் பிரதீப் ஜான், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பெரும் மேகக்கூட்டங்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கனமழை பெய்யும்

    கனமழை பெய்யும்

    நாகை , திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் தவறான நேரததில் மழை பெய்ய போகிறது என்றார். நெல் அறுவடைக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில் மழை பெய்தால் அது டெல்டா மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெதர்மேன் இந்த கருத்தை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

    English summary
    tamilnadu weathermen rain alert: "big ball of clouds seen from Delta to South Tamil Nadu, Nagai, Tiiruvarur, Pudukottai, Thanjai, Sivagangai Ramanthapuram and Thoothukudi needs to be watched in next 24 hrs. Heavy rains & extreme rains possible in next 24 hours. What a badly timed rains".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X