சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சமாதானம்" ஆக மாட்டேன்.. அவங்க சொத்துக்களை முடக்குங்க.. எஸ்பி.க்களிடம் சீறிய ஸ்டாலின்.. என்னாச்சு?

முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    Operation Ganja 2.0 | தமிழகத்திற்குள் நுழையும் கஞ்சா! தடுப்பாரா ஸ்டாலின்?

    திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி கிளர்ச்சியை தடுக்க முடியவில்லை, போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அதிமுக குற்றச்சாட்டுகளை கூறியதுடன், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.

    அதுபோலவே பாமகவும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.. பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

    நாட்டிலேயே பாஜகவை வலிமையாக எதிர்ப்பதில் டாப் முதல்வர் ஸ்டாலின்! தமிழக காங்கிரஸ் புகழாரம்! நாட்டிலேயே பாஜகவை வலிமையாக எதிர்ப்பதில் டாப் முதல்வர் ஸ்டாலின்! தமிழக காங்கிரஸ் புகழாரம்!

     ஆபரேஷன்

    ஆபரேஷன்

    இதையடுத்து, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து 'ஆபரேஷன் கஞ்சா' என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து போதைப் பொருட்கள் பிடிபட்டு வரும் நிலையில், இவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று நடத்தினார்.

     கலெக்டர்கள்

    கலெக்டர்கள்

    இன்று காலை 10 மணிக்கு முதல்வர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் துவங்கியது.. அப்போது, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையும், வருத்தமும் அளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

    சமாதானம்

    சமாதானம்

    போதைப் பொருள் ஒழிப்பில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.. மேலும் மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் சில உத்தரவுகளையும் பிறப்பித்து பேசியதாவது: "போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.. தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். போதைப்பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

     அடங்காத வியாபாரிகள்

    அடங்காத வியாபாரிகள்

    பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.. போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல. சமூக பிரச்சினை.. போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும். மேலும், போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும்.. உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்" என்று கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்

    English summary
    big order by tn chief minister mk stalin and assets of drug dealers should be frozen முதல்வர் ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X