சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உதிரும் இலைகள்"... ப்ளானே இதான்.. பட்ட பாடெல்லாம் வீணா.. பாஜக ஆதரவு யாருக்கு தெரியுமா.. கசிந்த தகவல்

எடப்பாடி, ஓபிஎஸ் இருவரில் யாரை ஆதரிப்பது என்று பாஜக தீவிரமாக யோசித்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: வரும் இடைத்தேர்தலில் தமிழக பாஜக என்ன முடிவெடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இடைத்தேர்தலில் போட்டியிட தயங்குவது ஏன்? என்பது குறித்து சில அனுமானங்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. அதேசமயம் நாளைய தினம், பாஜக எடுக்க போகும் முடிவுகள் குறித்தும் ஓரிரு தகவல்கள் கசிந்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில், களத்தில் இறங்கி போட்டியிடுவது குறித்து பாஜக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.. எடப்பாடி + ஓபிஎஸ் இவர்கள் 2 பேரில் யாராவது ஒருவருக்கு ஆதரவை வழங்கினாலும், அது எம்பி தேர்தல் களத்தை அசைத்து பார்த்துவிடுமே என்ற யோசனையும் அக்கட்சிக்கு உள்ளது.

அதனால், கூட்டணியில் உள்ள அதிமுகவையும், வரும் எம்பி தேர்தலையும் கணக்கில் வைத்து, அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தீவிர ஆலோசனையில் இறங்கி வருகிறது.

என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு

 2 டீம்கள்

2 டீம்கள்

இப்போதைக்கு கூட்டணியில் தனித்தனி நிலைப்பாடு நிலவி வருவதே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது எம்பி தேர்தலின் கூட்டணியிலும் எதிரொலிக்குமா என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. எனவே, இந்த இடைத்தேர்தலில், அதிமுகவின் 2 டீம்களையும் இணைத்து ஆதரவளிக்கலாம் அல்லது அவர்கள் இணையவில்லை என்றாலும் நாமே களத்தில் இறங்கி போட்டியிடலாம் அல்லது யாருக்கும் ஆதரவின்றி ஒதுங்கிவிடலாமா? என்றெல்லாம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்... அநேமாக இன்று இரவுக்குள், தமிழக பாஜக தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 அனுமானங்கள்

அனுமானங்கள்

பாஜக என்ன சொல்ல போகிறதோ? என்ற பதைபதைப்பில் ஓபிஎஸ்ஸூம் உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் நாளை அறிவிக்க போவதாக, தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. எனினும், தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துவிட்டு, பாஜக ஏன் இன்னமும் தன் முடிவை அறிவிக்கவில்லை என்ற குழப்பமும், சந்தேகமும் நிலவியபடியே உள்ளன.. அதேசமயம், பாஜக என்ன முடிவெடுக்க போகிறது என்பது குறித்த சில யூகமான தகவல்கள் வலம் வருகின்றன. எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் என 2 பேரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில், பாஜக தவித்து வருவதாக சொல்கிறார்கள்..

 புது புது சின்னம்

புது புது சின்னம்

அதனால், இந்த 2 அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாஜக மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.. ஒருவேளை இரட்டை இலை சின்னம் 2 அணிகளுக்குமே கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும்... ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் அண்ணாமலை திடமாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அதிமுகவை ஆதரிக்காமலும் செயல்பட பாஜக தலைவர்கள் திட்டமிட்டு உள்ளார்களாம்.

 நடுநிலை

நடுநிலை

அதன்படி அதிமுக இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், "நடுநிலை" வகிக்க முடிவு செய்துள்ளார்களாம்.. இதனிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தந்துள்ள பேட்டியில் இதுகுறித்த சூசக கருத்துக்களை சில வெளியிட்டுள்ளார்... அதாவது, "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாஜகவுக்கு பரீட்சார்த்த களம் கிடையாது.. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு" என்று கூறியுள்ளார்.. அதனால், நாளைய தினம் நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாஜகவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.

 டபுள் டீம்

டபுள் டீம்

ஒருவேளை, களத்தில் பாஜக போட்டியிடாமல் போனால், அதுவே எடப்பாடிக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகிவிடுமே என்று ஓபிஎஸ் தரப்பு கலக்கமாக இருந்து வருகிறது. பாஜக என்ன முடிவெடுத்து அறிவிக்க போகிறதோ என்று ஆவலுடன் காத்திருக்கிறது ஓபிஎஸ் டீம்.. இன்னும் வேட்பாளரையும் அறிவிக்கவில்லை.. பாஜக தன் முடிவை அறிவித்தால், உடனே தன்னுடைய முடிவையும் அறிவிக்க ஓபிஎஸ் ரெடியாக இருப்பதாக தெரிகிறது.. அந்தவகையில், நாளைய தினம் பாஜக + ஓபிஎஸ் இருவருமே முடிவை சொல்ல உள்ளார்கள்.. ஒருவேளை, பாஜக நடுநிலை வகித்தால், இதனால் பாதிக்கப்பட போவது எடப்பாடி பழனிசாமி டீமா? ஓபிஎஸ் டீமா? தெரியவில்லை... பார்ப்போம்..!!

ஹாட் களம்

ஹாட் களம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது அண்ணாமலை சூசகமாகவே ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.. அதில், "திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்த்து போட்டியிடும் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அப்படி நிறுத்தப்படும் வேட்பாளர் மக்கள் செல்வாக்கு பெற்றவராக, மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். பாஜவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி. இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரீட்சை கிடையாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.. அதாவது, "எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி, அதிமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தன் மூலம், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார் என்பதையே மறைமுகமாக இவ்வாறு தெரிவித்ததாக தகவல்கள் அப்போது வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Big plan by Tamil nadu bjp to remain neutral if double leaf symbol is paralyzed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X