சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சம்மட்டி அடி".. சறுக்கிய எடப்பாடி பழனிசாமி.. இப்படி சிக்கல் வந்துருச்சே.. அப்ப ஆளுக்கொரு சின்னமா?

எடப்பாடிபழனிசாமி, ஓபிஎஸ் இரு தரப்புக்குமே இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது... எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள நிலையில், இலை யாருக்கு ஒதுக்கப்படும்? அல்லது முடக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, சுப்ரீம்கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 நாட்களில் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க கெடு வைத்து உத்தரவு பிறப்பித்திருந்தனர்.. அதேபோல, தேர்தல் ஆணையத்துக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்... அதன்படி தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி

 சின்னம் யாருக்கு?

சின்னம் யாருக்கு?

அதில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்றும், தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

 எடப்பாடிக்கு செக்?

எடப்பாடிக்கு செக்?

அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பில் காத்து கிடந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.. அதுமட்டுமல்ல, நாளை அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவிருக்கும் நேரத்தில், தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட பதிலை அளித்துள்ளது, கவனத்தை பெற்றுள்ளது.. ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தற்போது தெரிவித்துள்ளதே, இலை முடக்கத்தை நோக்கி செல்வதாக கருதப்படுகிறது.

 டபுள் இலை

டபுள் இலை

அதேசமயம், தேர்தல் ஆணையர் எதன் அடிப்படையில் இதுகுறித்து முடிவெடுப்பார்? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, யாருக்கு அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதன் அடிப்படையில்தான் முடிவெடுப்பார்கள் என்று சொல்லப்பட்டாலும், தேர்தல் ஆணையமும் எந்த தரப்பையும் தனியாக இதுவரை அங்கீகரிக்கவில்லை.. அதனால்தான், உச்சநீதிமன்ற உத்தரவை நோக்கி அனைவரது கண்களும் உள்ளன.. தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை என்பதால் ஈரோடு கிழக்கில் இரட்டை இலை களம் காண முடியாது...

 ஆளுக்கொரு சின்னம்

ஆளுக்கொரு சின்னம்

எனவே, ஆளுக்கொரு சின்னத்தில் போட்டியிடவே வாய்ப்பு உள்ளது... தேர்தல் அலுவலர் முடிவு எடுப்பார் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில், தேர்தல் அலுவலர் ஆளுக்கொரு சின்னம் தான் ஒதுக்கக்கூடும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள விதமும் தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன், இலை முடக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் ஏற்பட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்பார்கள். இரு தரப்பும் கோரிக்கை விடுத்தால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.. அதனால், இரட்டை இலை சின்னம் முடங்கவே அதிக வாய்ப்புள்ளது.

 வைகைச்செல்வன்

வைகைச்செல்வன்

இந்நிலையில், இதுகுறித்து ஒரு சேனலுக்கு பேட்டியளித்த அதிமுகவின் மூத்த தலைவர் வைகைச்செல்வன், "தேர்தல் ஆணையம் முழுமையான ஜனநாயக கடமையில் இருந்தே நழுவிவிட்டதாக நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.. ஏனென்றால், ஜனநாயகத்தில், எது பெரும்பான்மையான அது வெற்றி பெற வேண்டும், அப்படி வெற்றி பெறும்போதுதான் ஜனநாயகம் தழைத்தோங்கும்,.. அப்படிப்பட்ட ஜனநாயக கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் நழுவிவிட்டது என்றே அதிமுக பார்க்கிறது..

 பழைய பதவிகள்

பழைய பதவிகள்

நடந்து முடிந்த பொதுக்குழு, உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடத்தி கொள்ளலாம் என்ற அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்பட்டது. அப்படிப்பட்ட நிலை இருக்கிறபோது, பொதுக்குழு முழுமையாக நடத்தப்பட்டு, பழைய பதவிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையை இன்று ஆதரித்திருக்க வேண்டும்.. எனினும், மீண்டும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் சந்தித்து வெற்றி வாய்ப்பை பெறுவோம்.. அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

அதேசமயம், இந்த விவகாரம் குறித்து சில அலசல்களும் நடந்து வருகின்றன... பொதுவாக, தேர்தல் அதிகாரி என்பவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக்கூடியவர் இல்லை.. ஒரு வேட்பு மனுவை ஏற்பது, நிராகரிப்பது, சின்னத்தை ஒதுக்குவது, இப்படிப்பட்ட உத்தரவுகள் யாவுமே, தேர்தல் அதிகாரியின் அதிகாரத்துக்குட்பட்டே பார்க்கப்படுகின்றன.. அதேசமயம், எந்த ஒரு கட்சிக்கும் விதிமுறைகள் உள்ள நிலையில், அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டே, கையொப்பமிட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைக்கும்.. ஆவணங்களையே, தேர்தல் ஆணையமும் பத்திப்படுததி வைக்கும்.. ஒருவேளை, அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டால், அதை திருத்தி மட்டுமே கொள்வார்கள்.

புது சின்னம் + சுயேச்சை

புது சின்னம் + சுயேச்சை

அந்தவகையில், ஜூலையில் நடத்தப்பட பொதுக்குழுவில் மாற்றப்பட்ட விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்திடம் என்ன விதி வரையறைக்கப்பட்டுள்ளதோ, முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... இப்போதைக்கு கட்சி 2 ஆக உள்ளதால், 2 தரப்புமே இலையை கோருவதால், யாருக்குமே சின்னம் தரப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.. இருவருமே வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், சுயேச்சையாகவும் + புது சின்னத்துடனும் அவர்கள் களம் காணவே நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்கிறார்கள்..!!

English summary
Big Shock for the Edapadi Palanisamy team and Who will get the double leaf
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X