நிஷா நைட்டியை தூக்கி.. ஆரி ஆடிய ஆட்டம்.. அடேங்கப்பா பிக் பாஸ்..கலகலத்து போச்சே வீடு!
நேற்றைய நிகழ்ச்சியில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது
சென்னை: அநேகமாக பிக்பாஸ் வீட்டில் நைட்டியுடனே விளையாடி முடிச்சிட்டு வெளியே போற ஆள் நம்ம நிஷாவாகத்தான் இருக்கும்.. அந்த அளவுக்கு நிஷாவின் நைட்டி உலாவல்கள் ஃபேமஸ் ஆகி வருகின்றன!
இப்போதுதான் ஆட்டம் சூடு பிடித்த மாதிரி சென்று கொண்டிருக்கிறது.. நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது டாஸ்க்கை அறிவித்தனர்.. போட்டியாளர்கள் 2 ஆக பிரிந்து பட்டிமன்றம் நடத்த வேண்டும்.
பிக்பாஸ் வீடு ஆனந்த வீடா, போராட்டக்களமா? என்பதுதான் தலைப்பு... இதில் ஆனந்த வீடா என்ற தலைப்பில் பேச ஆள் பஞ்சமாகிவிட்டதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் போராட்டக்களமா என்பதை பற்றி பேச வரிசை கட்டி வந்து விட்டனர் போட்டியாளர்கள்.. பிறகுதான் வேறு வழியில்லாமல் ஆனந்தம் என்ற தலைப்பில் நொந்து கொண்டே சிலர் பேச ஆரம்பித்தனர்.
பட்டிமன்றம்
அர்ச்சனாவை நடுவராக போட்டுவிடக்கூடாதே என்று நினைத்தபோது, சரியாக அவரைதான் நடுவராக அறிவித்தார் பிக்பாஸ்.. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் போனதில் இருந்தே ஜீ தமிழ் பார்ப்பதுபோலவே ஒரு ஃபீலிங் இருக்கிறது.. அந்த வீட்டுக்கு சென்றும் அர்ச்சனா வளவளவென பேசி கொண்டே இருப்பதை பார்த்தால் வித்தியாசமாக எதுவுமே மனசில் ஒட்டவில்லை.
பழமொழி
இந்நிகழ்ச்சியில் எதிர்பாராதவர்கள் எல்லாம் நன்றாக பேசினார்கள்.. எதிர்பார்த்தவர்கள் அதாவது அனிதா, உட்பட பலரும் சொதப்பிவிட்டனர்.. பேச்சில் பழமொழி இருக்கலாம், பேச்சே பழமொழியாக இருக்குமா? அப்படித்தான் இருந்தது வேல்முருகன் பேச்சும்! வயசில் சின்னவராக இருந்தாலும் பாலா பேச்சு சிறப்பாகவே இருந்தது.. நிஷாவுக்கு பேச்சென்றால் அல்வா சாப்பிடுவதாச்சே.. "புறணி பேசுபவர்களை மக்கள் செருப்பால அடிப்பாங்க" என்று ஆரம்பித்து வழக்கம்போல் அடி தூள்தான்!
பிக்பாஸ்
ஆனால், நிஷா இந்த பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்து ஏன் நைட்டியுடனேயே சுற்றி கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.. பெரும்பாலான நேரங்களில் நைட்டிதான்.. நிஷாவை வைத்து வெளிவரும் மீம்ஸ்கள்கூட நைட்டியுடன்தான் இருக்கின்றன.. நிஷாவின் நைட்டியை போட்டுக்கிட்டு மல... மல... பாட்டுக்கு டான்ஸ் ஆடிய ஆரிய அனைவரிடமும் கிளாப்ஸ் வாங்கினார்.. சீரியஸ் ஆரி நேற்றுதான் சற்று சிரிப்பு காட்டினார்..
காஞ்சனா
இதில் அனைவரையும் அள்ளி தூக்கிவிட்டது சுரேஷ்தான்.. காஞ்சனா வேஷம் போட சொன்னார்கள்.. சூப்பரான பெர்ஃபார்மன்ஸ் தந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.. அதைவிட, சுரேஷ் ஆக்டிங்குக்கு அனிதா கிளாப்ஸை அள்ளி வழங்கி இன்னொரு ஆச்சரியத்தை தந்தார்... இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காத்திருக்கிறதோ!