• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிக் பாஸ் 4: வீட்டிற்குள் புகுந்த "சாதி".. கொளுத்தி போடும் விஷமிகள்.. துடித்து போன ரம்யாவின் "ஆர்மி"

|

சென்னை: யார் செய்த வேலை இது என தெரியவில்லை.. வீட்டில் உள்ளவர்களிடம் ரம்யா பாண்டியன் அதிகமாக சாதி பார்த்து பழகுவதுபோல உள்ளதாக யாரோ கொளுத்தி போட, ரம்யாவின் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

பிக்பாஸ் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.. பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்பதால், எல்லாருமே நல்ல "மைன்ட் செட்"-டுடன் வந்திருப்பதையும் உணர முடிகிறது.

Bigg Boss 4 Tamil: Is Ramya Pandian Seeing Caste Among the Contestants

ஆனால், கடந்த கால பிக்பாஸ் போல இல்லாமல் இந்த முறை நிறைய மைனஸ்கள் இப்போதே தெரிவது சோர்வையே தந்துவருகிறது. சிறு சிறு பூசல்கள் போட்டியாளர்களுக்கு நடுவில் இருந்தாலும், நெகிழ்ச்சி தருணம் என்பது மிக குறைவுதான்.. விளையாடி ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருப்பதாலோ என்னவோ, பரஸ்பர நட்பும், ஸ்நேகமும் குறைவாக தெரிகிறது.

அதுபோலவே, சுரேஷின் பல பேச்சுக்கள் ஏற்கத்தக்கவையாக இல்லை.. கன்டன்ட் தருகிறார் என்பதற்காக உடனிருப்பவரை காயப்படுத்துவதும், ஆரம்பத்திலிருந்தே வார்த்தைகளில் கவனமில்லாமல் இருப்பதும் வருத்தத்தையே தருகிறது.. குறிப்பாக, குரூப்பிசம் இருக்கிறது என்ற ஒரு வார்த்தையை அவர் சொல்லி இருக்கவே கூடாது. இனி வரும் நாட்களில் அதை திருத்தி கொண்டால் மட்டுமே இந்த வீட்டில் சுரேஷால் நிலைக்க முடியும்... வெறும் விதண்டாவாதங்களும், புறம்பேசுவது மட்டுமே வெற்றிக்கு உதவாது.

அதேபோல, ரம்யா பாண்டியனையும் சர்ச்சைக்குள் கொண்டு வர சிலர் முயற்சித்து வருகின்றனர். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ரம்யா பாண்டியன் மீது சாதி அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை தேவையில்லாமல் யாரோ சோஷியல் மீடியாவில் கிளப்பி விட்டு வருவதாக தெரிகிறது.. வேல்முருகனுடன் இதுவரை அவர் எந்த ஒரு நல்லது கேட்டதையும் பகிர்ந்து கொள்ளவில்லை, அவரிடம் ரம்யா பாண்டியன் அதிகமாக சாதி பார்த்து பழகுகிறாராம்.

இதுதான் ரம்யாவின் ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.. அந்த புத்தி ரம்யாவுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.. இதெல்லாம் கெட்ட பெயரை ஏற்படுத்தும் முயற்சி என்று பொங்குகிறார்கள் ரசிகர்கள். இது ஒரு விளையாட்டு.. இதிலும் சாதியை புகுத்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக இதற்கு முந்தைய சீசன்களில் கமலிடம் இருந்த எனர்ஜி இப்போது இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.. அரசியல் வார்த்தைகளை அள்ளி தெளித்தாலும், பழைய ஸ்பிரிட் கமலிடம் இல்லை என்ற ஒரு பேச்சும் உள்ளது. இப்படி அனுமானத்தில் ஒருசில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்!

English summary
Is Ramya Pandian seeing caste among the contestants?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X