• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இடம் பொருள் ஏவல் பார்த்து சொல்லணும் என்ற சுரேஷ்... பாலாவை வெளுத்த அர்ச்சனா

|

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 தினசரியும் சண்டையும் சச்சரவுமாக நடந்து வருகிறது. நேற்று வரை குழந்தை குழந்தை என்று பாலாவை சொல்லி வந்த அர்ச்சனா லெட்ப் ரைட் வாங்கி கடைசியில் அழவே வைத்து விட்டார். ஆறடி ஆம்பளையை அழ வச்சிட்டியே அர்ச்சனா என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

அனிதா சொன்ன கருத்து சரியானதாக இருந்தாலும், அதை சரியான இடம் பொருள் பார்த்து சொல்ல வேண்டும் என்று சனம், சம்யுக்தாவிடம் பேசும் போது சுரேஷ் சொன்னார்.

பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் அறிவுரை கூறும் ஆரி, முதலில் அனிதாவிடம் ஏன் இன்று காலை முதலே சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அனிதா நான் பேசும் வார்த்தையை யாரும் கவனிக்காததுப் போல் இருந்தது என்று ஆரம்பித்தார்.

மன்னித்த சுரேஷ்

மன்னித்த சுரேஷ்

சுரேஷை, வாடா போடா என்று மரியாதைக் குறைவாக சனம் பேசியதைக் கூட மன்னித்துவிட்டார், ஆனால் நான் அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தவில்லையே என்று ஆதங்கப்பட்டார் அனிதா. நான் என்பதால் தான் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டார் என்றும், இந்த விஷயத்தை கமல் சார் வரை கொண்டுச்செல்வார் என்றும் அனிதா சொன்னார்.

அழுகையும் ஆதங்கமும்

அழுகையும் ஆதங்கமும்

சுரேஷ் தான் கேட்ட மன்னிப்பை ஏற்காமல் ஓடியது அவர் இந்த இடத்தில் தன் சாணக்கிய மூளையை பயன்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது என்று சொன்ன அனிதா மாறி மாறி அழுது கொண்டேதான் இருந்தார். பாலாஜியை தவிர யாரும் இந்த விஷயம் சரியென்று எனக்கு ஆதரவாக பேசவில்லை என்று வருந்தினார்.

என்ன சொல்கிறார் சனம்

என்ன சொல்கிறார் சனம்

மறுபக்கம் சுரேஷ் சனமிடம் நான் என் கோபத்தை கட்டுப்படுத்துகிறேன் அது என்னை தூண்டிவிடுமோ என்ற பயத்தில் தான் ஓடினேன் தவிர அவர் அழுததற்கு நான் பொறுப்பில்லை என்றார். அவர் செய்தது தவறு என அவருக்கு தோன்றினால் அவரே பார்த்துக்கொள்ளட்டும் என்று சுரேஷ் சொல்ல உடனே சனம் என்னிடமும் ரேன்கிங் டாஸ்கில் அப்படிதான் நடந்துக்கொண்டார் அதனால் தான் நான் அவரிடம் பேசவேமாட்டேன் என்றார். சனம் செய்வதை பார்த்தால் சமாதானப்படுத்துவதுப் போல் சென்று கேப்பில் கெடா வெட்டியதுபோல் தெரிகிறது.

நல்ல விஷயம் சொன்னா சரிதான்

நல்ல விஷயம் சொன்னா சரிதான்

நேற்று என்ன நடந்தது என்று சம்யுத்தா சுரேசிடம் கேட்க அதற்கு சுரேஷ், சுமங்கலி எல்லாம் வாங்க வந்து முதலில் அரிசி போடுங்கனு சொன்னேன், இங்கு வேறு யாராவது இருந்திருந்தால் நான் சொன்னது தவறாக இருக்கும் என்றார். அதற்கு சம்யுத்தா ஒரு நல்ல விஷயம் சொல்லுறது சரிதானே என்று சுரேசிடம் கேட்க, அதற்கு சுரேஷ் அந்த நல்ல விஷயத்தை எந்த இடத்தில் எந்த நேரத்தில் சொல்ல வேண்டுமோ இடம் பொருள் ஏவல் பார்த்து சொல்ல வேண்டும் என்றார்.

அபசகுனம் ஆகாது

அபசகுனம் ஆகாது

கோடிக்கணக்கான மக்கள் நம்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் அபசகுன வார்த்தைகள் வரக்கூடாது என்றும், இனிமேல் இதைப்பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி எழுந்த சுரேஷ் பார்த்து சனம் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு ஒன்றும் பேச வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சுரேஷ் நீங்க கேட்டீங்க அதனால் சொன்னேன் என்றார்.

வீடு கூட்டுவதில் அக்கப்போர்

வீடு கூட்டுவதில் அக்கப்போர்

ஒருவழியாக அழுகை முடிந்து தங்க வேட்டை டாஸ்க் முடிந்து அக்கடா என்று படுக்கப் போன நேரத்தில் வீடு கூட்டுவதில் ஏழரையை கூட்டினார் அர்ச்சனா. வேல்முருகன், ஷிவானி வீடு கூட்டும் போது பாலாஜி தூங்கிக்கொண்டிருக்க, போய் எழுப்பச் சொன்னார். அரைமனதாக வந்து கேப்டன்னா என்னா கொம்பா முளைச்சிருக்கு நான் கேப்டன் ஆனா அம்மிக்கல்ல ஆட்டச் சொல்றேன் என்றார்.

அழ வைத்த அர்ச்சனா

அழ வைத்த அர்ச்சனா

பாலாவின் பேச்சுக்கு அர்ச்சனா ஒன்று சொல்ல, அதற்கு ஆதரவாக ரியோ பேச மாறி மாறி முட்டிக்கொண்டது. அந்த சண்டை இன்றைக்கும் நீடிக்கிறது. திமிராக பேசிய பாலாவை வேற லெவலில் வெளுத்து வாங்கினார் அர்ச்சனா. கேப்டனை புடிக்கல என்று பாலா கூற, அதற்கு அர்ச்சனா, பாலா சார் வந்து சொல்லிட்டாருங்க. பாலா சார் வருவாரா? பாலா சார் வருவாரா? அப்படில்லாம் எங்களால வெயிட் பண்ண முடியாது என்று சொல்ல கடைசியில் கார்டன் ஏரியாவில் போய் கண்ணீர் விட்டு அழுதே விட்டார் பாலா.

அனிதா மட்டும்தான் அழணுமா

அனிதா மட்டும்தான் அழணுமா

இத்தனை நாட்களாக அனிதா அழுவதை மட்டுமே பார்த்து எரிச்சல் பட்டவர்கள் இன்று பாலா அழுவதைப் பார்த்து ஆறடி ஆம்பளையை அழ வச்சிட்டியே அர்ச்சனா என்று கேட்கின்றனர். இன்றைக்கு ஏதோ தரமான சம்பவம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போலயே.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Big Boss Season 4 has been going on daily with fights and fights. Archana, who had been telling Bala that she was a baby till yesterday, bought Led Right and finally kept crying. They started to hear Aradi Ambala crying Archana.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X