சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வார்னிங்".. இது பீகாரோடு நிற்காது.. தமிழகத்துக்கும் ஓடி வரும்.. சுதாரிக்கணும் அதிமுக!

பாஜக அரசின் அதிரடிகள் தமிழகத்துக்கும் ஒரு வார்னிங் தான்

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்ததை வெறும் பீகார் மாநில வெற்றியாக மட்டுமே பார்த்துவிட முடியாது.. சில மாநில கட்சிகளுக்கு தரப்படும் மறைமுக வார்னிங் என்றே கருதப்படுகிறது. பீகாரில் 125 இடங்களைக் கைப்பற்றி பாஜக-ஜேடியூ ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆர்ஜேடி-காங். இடதுசாரிகள் அணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன.

Recommended Video

    மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநில இடைத்தேர்தல்களிலும் BJP-யே முன்னிலை | Oneindia Tamil

    லாலு பிரசாத் யாதவ் சிறைக்குப் போவதற்கு முன்பும் சரி, ஜெயிலுக்கு போன பிறகும் சரி, பீகாரின் நிலை தறிகெட்டு பயணித்தது.. ஊழல் வழக்கில் அவர் சிறை சென்றாலும் ராப்ரியால் தொடர்ந்து, மாநிலத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. அதற்கு பிறகுதான் நிதிஷ்குமாரின் அதிரடி ஆரம்பமானது.

    ஆனால் நிதிஷ் குமார் தெரிந்தோ தெரியாமலோ பாஜகவின் கட்டுக்குள் போய் விட்டார். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பாஜகவின் ஆதிக்கமே மறைமுகமாக இருந்தது.

    எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. 55 தொகுதிகளில் 1000 வாக்குகளே வித்தியாசம்.. திக்திக் பீகார்!எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. 55 தொகுதிகளில் 1000 வாக்குகளே வித்தியாசம்.. திக்திக் பீகார்!

     அதிக சீட்கள்

    அதிக சீட்கள்

    தற்போதைய இவர்கள் கூட்டணியை அத்தனை சுமூகமான கூட்டணி என்று சொல்லிவிட முடியாது.. எத்தனையோ பிரச்சனைகள், காழ்ப்புணர்ச்சிகள், இவர்களுக்குள் நிறைய இருந்தன.. இப்போதுகூட அதிக சீட்டுகளை வாங்கி கொண்டுதான் பாஜக தேர்தலை சந்தித்தது.. இதற்கு காரணம், பாஜக தலைமையில், மாநிலத்தை ஆளுவது என்ற ஐடியாதான்.

     சிராக் பஸ்வான்

    சிராக் பஸ்வான்

    அந்த வகையில் நிதிஷ் சற்று ஏமாந்துபோய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அதேபோல, சிராக் பஸ்வானை தனியாக நிற்க வைத்ததும் இவர்களின் மாஸ்டர் ஸ்டிரோக்தான்.. அதன்பலன்தான் பாஜக முன்னிலை பெற்றுவருவது.. பீகார் போலவேதான் தமிழகத்தின் நிலைமையும் நாளை மாறுமா? நிதிஷ் இருந்த இடத்தில்தான் அதிமுகவும் இருக்குமா? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

     தென்மாநிலம்

    தென்மாநிலம்

    பாஜகவின் இழுத்த இழுப்புக்கெல்லாம் அதிமுக அரசு செல்லவில்லை என்றாலும், முழுசுமாக பகைத்து கொள்ள முடியாத நிலைமையும் உள்ளதை மறுக்க முடியாது. காரணம், தென்மாநிலங்களில், தமிழகத்தில்தான் காலூன்ற முடியாத நிலை உள்ளது.. கேரள மண்ணும் அப்படியேதான் இருக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், சுவப்னா விவகாரம் அங்கு வெடித்ததும், பினராயி அரசுக்கு பலவீனம் சேர்ந்துவிட்டது.

     முதல் குறி

    முதல் குறி

    அந்த வகையில் தமிழகம்தான் இப்போதைக்கு பாஜகவின் ஒரே கணக்காக உள்ளது.. அதிரும் திமுகவை வீழ்த்துவது என்பதுதான் முதல் குறியாக உள்ளது.. எப்படியும் சசிகலாவை வைத்து கணக்கு போடலாம்.. அல்லது சாதி ரீதியாக கட்சியை பிளவுபடுத்தலாம்.. அல்லது மறைமுகமான அழுத்தத்தை அதிமுகவுக்கு தரலாம்.

    லாலு

    லாலு

    ஒருவேளை அப்படி ஒரு முன்னெடுப்பை பாஜக மேற்கொண்டால், அதை அதிமுக எதிர்கொள்ள தயாராக வேண்டியிருக்கும்! அன்று லாலுவை உள்ளே தள்ளினவர்கள்... நேற்று இருந்து நிதிஷை டம்மி ஆக்கினவர்கள்.. இன்று சிராக்கை கச்சிதமாக கட்டம் கட்டி பயன்படுத்தி கொண்டவர்கள்.. நாளை எதுவும் செய்வார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்த பீகார் ரிசல்ட்!

    English summary
    Bihar Election Result: BJP's master storke in Bihar Election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X