சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மக்களே உஷார்.. விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்.. மாஸ்க் அணியாமல் பயணித்தால் ரூ.500 அபராதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் விரட்டி விரட்டி அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்ப்பதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று முகத்தில் மாஸ்க் அணிவது. இதன் மூலம் தும்முவது போன்றவற்றின் மூலமாக கிருமி பொது இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.

இனிமேல் நாடு முழுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்பதும் உத்தரவு.

Tamilnadu Auto: தமிழக அரசு அதிரடி.. நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் உண்டுTamilnadu Auto: தமிழக அரசு அதிரடி.. நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி.. முக்கிய கன்டிஷன்கள் உண்டு

கமிஷனர் விஸ்வநாதன்

கமிஷனர் விஸ்வநாதன்

இந்த நிலையில்தான், சென்னையில் இன்று பேட்டியளித்த நகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும், இந்த விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கேற்ப சென்னை போலீஸ் நடவடிக்கையை துவக்கியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னை நகரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. எனவே இங்கு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டி உள்ளது. எனவேதான், காவல்துறை இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

500 ரூபாய் அபராதம்

500 ரூபாய் அபராதம்

சென்னையில் இன்று மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நபருக்கும் 500 ரூபாய் என்ற அளவில் அபராத தொகை இருக்கிறது.

ஹெல்மெட் பாணி

ஹெல்மெட் பாணி

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் எப்படி ஒரு குற்றச்செயலோ, அதுபோலத்தான் இதுவும். அபராதத்திற்கு உரிய குற்றச் செயலாக கருதப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

English summary
The Chennai police impose fine of 500 rupees for those who are not wearing mask, while riding two wheelers, union government has already issued advisory regarding compulsory mask.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X