சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அதிமுக, திமுக அடிச்சுக்க முடியாது.. அடிச்சுக்கவே முடியாது!

கோடீஸ்வர வேட்பாளர்களை அமமுக இடைத்தேர்தலில் களம் இறக்கி உள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    AMMK: அமமுகவை இந்த விஷயத்தில் மட்டும் அடிச்சுக்க முடியாது- வீடியோ

    சென்னை: சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள 22 அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்களாம்! கோடீஸ்வர வேட்பாளர்களில் அதிமுக, திமுகவை விட அதிகம் பேர் இடம் பெற்றிருப்பது அமமுகவில்தானாம்.

    காமராஜர், கக்கன் காலங்களில் வேட்பாளர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் தங்களது மனங்களால் மக்களை வென்றார்கள். அதனால் பணம் என்பது ஒரு பொருட்டாக மக்கள் இவர்களிடம் அன்று பார்க்கவில்லை.

    ஆனால் காலம் செல்ல செல்ல, சொத்துக்களின் மதிப்பை அறிந்து சீட் கொடுக்கும் நிலை உருவானது (கூடவே ஜாதியும்- திராவிடக் கட்சிகள்தான் இதில் லீடிங்). இதனால் மக்களுக்கு சேவை செய்ய குணமிருந்தும், தேர்தலில் போட்டியிடாத நிலைமை ஏற்பட துவங்கியது. அப்படியே போட்டியிட்டாலும் பெரும்பாலும் தோல்வியே கையில் வந்து விழுந்தது!

    பொதுவாழ்விற்கு லாயக்கே இல்லாதவர் மாயாவதி... மோடி மீதான விமர்சனத்தால் ஜெட்லி ஆத்திரம் பொதுவாழ்விற்கு லாயக்கே இல்லாதவர் மாயாவதி... மோடி மீதான விமர்சனத்தால் ஜெட்லி ஆத்திரம்

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    ஆனால் இதனை இந்த முறை உடைத்து வெளியே வந்தது நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும்தான்.. ஏழை பாழை வேட்பாளர்கள் அதிகம் இருப்பது இந்த கட்சிகளில்தான். மத்தபடி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக, அமமுக என எல்லாமே பணபலம் உள்ள கட்சிகளே... முக்கால்வாசி வேட்பாளர்கள் பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள்.

    கோடீஸ்வரர்கள்

    கோடீஸ்வரர்கள்

    இந்த நிலை இடைத்தேர்தலிலும் நீடித்து உள்ளது. திமுக, அதிமுக என இரண்டையும் தள்ளிவிட்டு அதிக அளவில் கோடீஸ்வரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது அமமுக. அதாவது 22 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களில் 19 பேர் கோடீஸ்வரர்களாம். 2வது இடத்தில் திமுக உள்ளது. அதாவது திமுகவில் 17 கோடீஸ்வரர்கள். ஆளும் கட்சியான அதிமுக 3வது இடத்தில்தான் வருகிறது. இங்கு 16 கோடீஸ்வரர்கள்தான் களம் இறங்கி உள்ளார்களாம்.

    ஒருங்கிணைப்பாளர்

    ஒருங்கிணைப்பாளர்

    இதனை தேர்தல் சீர்திருத்த இயக்கம் Movement for Electoral Reforms (எம்.ஈ.ஆர்) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். ரங்கராஜ் இன்று சென்னையில் வெளியிட்டார்.

    உறுப்பினர்கள்

    உறுப்பினர்கள்

    அதில், மக்கள் நீதி மய்யம் 8 கோடீஸ்வரர்களை நிறுத்தி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் தமிழர் கட்சியின் 22 வேட்பாளர்களில் எவரும் கோடீஸ்வரரே கிடையாதாம். மே மாத இறுதியில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 212 விலிருந்து 234 ஆக உயரும் போது, அதில் இடம்பெறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் உயரும். புதிய உறுப்பினர்களில் குறைந்தது 16 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பர், என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    பொங்கலூர் பழனிசாமி

    பொங்கலூர் பழனிசாமி

    டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்களில் 4 பேர் திமுக, 3 அதிமுக, 3 அமமுக ஆகும். அவர்கள் விவரம்: சூலூரில் திமுகவின் பொங்கலூர் பழனிச்சாமி ( சொத்து ரூ. 44.66 கோடி). ஓசூரில் அதிமுகவின் ஜெயந்தி (ரூ. 26.43 கோடி), சூலூர் அமமுக வேட்பாளர் கே. சுகுமார் (ரூ. 19.45 கோடி), திருவாரூர் அமமுக எஸ். காமராஜ் (ரூ. 18.39 கோடி), ஆண்டிப்பட்டி திமுக ஏ மகாராஜன் (ரூ. 15.24 கோடி), ஆண்டிப்பட்டி அமமுக ஏ லோகிராஜன் (ரூ. 13.17 கோடி), பூந்தமல்லி திமுக ஏ கிருஷ்ணசாமி (ரூ. 12.34 கோடி), திருப்பரங்குன்றம் டாக்டர் பி. சரவணன் திமுக ( ரூ. 12.11 கோடி), சாத்தூர் அதிமுக ராஜ வர்மன் (ரூ. 7.95 கோடி), அரவக்குறிச்சி அமமுக ஷாகுல் ஹமீது ( ரூ. 6.07 கோடி).

    English summary
    There are more Millionaries candidates in AMMK than the AIADMK and DMK parties
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X