சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜஸ்தான், கேரளா, ஹிமாச்சல் பிரதேசம்.. நாடு முழுக்க வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. மக்களே உஷார்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவின் பல பகுதிகளிலும், பறவைக் காய்ச்சல் (bird flu) பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிக்கன் சாப்பிடுவோர் அச்சமடைந்துள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில், பறவை காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த 1600 பறவைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளன.

ராஜஸ்தானிலும் காகம் மற்றும் மயில்கள் திடீரென இறந்ததற்கு பறவைக்காய்ச்சல் காரணமாக இருக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நாங்களா அனுபவம் இல்லாதவர்கள்... நாங்கள் ஒரு சர்வதேச நிறுவனம்... சீறும் பாரத் பயோடெக்நாங்களா அனுபவம் இல்லாதவர்கள்... நாங்கள் ஒரு சர்வதேச நிறுவனம்... சீறும் பாரத் பயோடெக்

கேரளாவில் பறவைக் காய்ச்சல்

கேரளாவில் பறவைக் காய்ச்சல்

இன்னொரு பக்கம் கேரளாவின் இரண்டு பகுதிகளில் பறவைக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை அந்த மாநில அமைச்சர் ராஜு தெரிவித்தார். கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளில் பறவை காய்ச்சல் மீண்டும் பரவி வருவதாக கூறப்படுகிறது. வாத்து பண்ணை ஒன்றிலிருந்து பறவை காய்ச்சல் பரவி உள்ளது.

கேரளா வாத்துப் பண்ணை

கேரளா வாத்துப் பண்ணை

அங்கு சுமார் 1,500 வாத்துக்கள் இறந்துள்ளன. இதையடுத்து மேலும் 36 ஆயிரம் வாத்துக்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு பரவவில்லை என்று அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதிகரித்து வரும் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜூ தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம்

ராஜஸ்தான் மாநிலம்

ராஜஸ்தான் மாநிலத்தில் மயில்கள் மற்றும் காகங்கள் பல இறந்துள்ளன அவற்றுக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் பறவை காய்ச்சல் காரணமாகத்தான் அவை இறந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில், பறவைக் காய்ச்சல் பரவியதால் 1,800 புலம்பெயர் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பாங் அணை ஏரி பகுதியில், அரிய சில இனங்கள் உட்பட பல வகை பறவைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து அந்த பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.

English summary
Bird flu disease reported in many places across India from Kerala to Rajasthan and Himachal Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X