சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7.5% ஒதுக்கீடு குறித்து கேட்டா 7 தமிழர் விடுதலையில் திமுக- காங். இடையே சிண்டு முடிந்துவிட்ட குஷ்பு!

Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலஅவகாசம் கேட்டிருப்பது சரிதான் என பாஜக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு அண்மையில் பாஜகவில் சேர்ந்தார். சென்னையில் இன்று பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுகவை ஓரம் கட்ட பாஜக செம பிளான்.. பீகார் பாணியில் 'சர்ப்ரைஸ் வியூகம்'.. ரிசல்ட்டுக்கு வெயிட்டிங் திமுகவை ஓரம் கட்ட பாஜக செம பிளான்.. பீகார் பாணியில் 'சர்ப்ரைஸ் வியூகம்'.. ரிசல்ட்டுக்கு வெயிட்டிங்

ஜீவித்குமார் சாதனை

ஜீவித்குமார் சாதனை

நீட் தேர்வில் தமிழக மாணவர்களும் சாதிக்க முடியும் என ஜீவித்குமார் நிரூபித்திருக்கிறார். அவருக்கு நான் லேப்டாப் கொடுத்து போனில் பேசினேன். அனைத்து மாணவர்களுக்குமான வாய்ப்புகளை அரசாங்கம் செய்து கொடுத்து வருகிறது.

அவகாசம் கேட்பதில் என்ன தவறு?

அவகாசம் கேட்பதில் என்ன தவறு?

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் அவகாசம் கேட்டிருக்கிறார். சட்ட ஆலோசனைகளுக்கு 4 வார அவகாசத்தை ஆளுநர் கேட்பதில் என்ன தவறு?

காங். நிலைப்பாடு என்ன?

காங். நிலைப்பாடு என்ன?

ராஜீவ் காந்தி கொலையில் 7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதிக்கிறார் எனில் அதற்கு ஏன் தமிழ்நாட்டில் இதுவரை போராட்டம் நடத்தவில்லை? இதுபற்றி காங்கிரஸ் கட்சி ஏன் வாயே திறக்கவில்லை?

மன்னிப்பு கேட்க வேண்டும்

மன்னிப்பு கேட்க வேண்டும்

அனைத்து பெண்களையும் விபசாரிகள் என திருமாவளவன் பேசுவதுதான் கொள்கையா? திருமாவளவன் தன்னுடைய பேச்சுக்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும். இவ்வாறு குஷ்பு கூறினார்.

English summary
BJP Actor Kushbu has justified that the Tamilnadu governor's delaying on 7.5% Reservation bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X