சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்த டாக்டர் சுப்பையா எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக நடிகை குஷ்பு கருத்து ஏதும் தெரிவிப்பாரா? என்பது நெட்டிசன்கள் கேள்வி.

மனுஸ்மிருதியில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். ஆனால் பெண்களைத்தான் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டதாக குஷ்பு உள்ளிட்டோர் கூறி போராட்டம் நடத்துகின்றனர்.

குஷ்புவின் போராட்டம்

குஷ்புவின் போராட்டம்

மனுஸ்மிருதியில் சொல்லப்பட்ட இழிவான கருத்துகளை திருமாவளவன் எடுத்துக் கூறினார் என்கிற வாதத்தை ஏற்கவில்லை. இதனை நிராகரித்து குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தினர். அப்போது அவரை கைது செய்து சொகுசு விடுதியில் போலீசார் தங்க வைத்தது சர்ச்சையானது.

எய்ம்ஸ் மருத்துவமனை

எய்ம்ஸ் மருத்துவமனை

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான உறுப்பினர் குழு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த குழுவில் சென்னை டாக்டர் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையானது. சென்னையில் சாதாரண பிரச்சனைக்காக மூதாட்டி வீட்டு முன்பு திருட்டுத்தனமாக சிறுநீர் கழித்து சிசிடிவி கேமரா மூலம் சிக்கியவர் இந்த சுப்பையா.

சிறுநீர் சுப்பையா

சிறுநீர் சுப்பையா

இவர் மீது சென்னை போலீசார் வழக்கும் பதிவு செய்தனர். இந்த சுப்பையாவைத்தான் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குஷ்புவின் கருத்து என்ன?

குஷ்புவின் கருத்து என்ன?

மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியதற்காக திருமாவளவன், பெண்களை கொச்சைப்படுத்தியதாக குதிக்கிறார் குஷ்பு. இங்கே நிகழ்காலத்தில் வயதான மூதாட்டியை கொடுமைப்படுத்தி அவரது வீட்டு முன்பு மனசாட்சியே இல்லாமல் ஒரு மருத்துவர் என்றும் நினைக்காமல் சிறுநீர் கழித்த சேட்டைபிடித்த சுப்பையாவின் நியமனத்துக்கு குஷ்பு என்ன கருத்து சொல்ல போகிறார்? தமிழகமே அவரது கருத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Netizens asked BJP Actor kushbu may comment on AIIMS row?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X