சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பலமுனை தாக்குதல்.. கருணாநிதி காலத்தை விட ஸ்டாலினுக்கு செம சவால்.. சமாளித்து கரையேறுவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்படி சூழல் திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது கூட அந்த கட்சி சந்தித்து இருந்ததா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. திமுகவையும், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினையும் குறிவைத்து திமுகவுக்கு நேர்எதிரான சிந்தனை உள்ள பாஜகவும்சரி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சரி பலமுனை தாக்குதலை நடத்தி வருகின்றன.

வலிமையாக இருக்கும் திமுகவும் சோதனையான காலம் இது.. ஆளும் கட்சியை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் குறிவைத்து எழும் விமர்சனங்கள்.. பல முனை தாக்குதல்கள் என பலமாக தாக்குதலுக்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளாகி வருகிறது.

மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவைவிட, எட்டரை ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஸ்டாலின் மற்றும் உதயநிதியை குறிவைத்து கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

ஸ்டாலினை புகழ்வதா? அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தது பாஜகஸ்டாலினை புகழ்வதா? அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகள், விவாதங்களில் பங்கேற்க தடை விதித்தது பாஜக

திமுக மீது

திமுக மீது

இது ஒருபுறம் எனில் அரசியல் ரீதியாக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான, பாஜக, பாமக, தேமுதிக ஆகி கட்சிகள் விடாமல் ஸ்டாலினையும் திமுகவையும் விமர்சித்து வருகின்றன.

முரசொலி

முரசொலி

இதனால் தாக்குதல் நடத்த முயன்ற திமுக, பலமுனை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முரசொலி நில விவாகரம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு பாமக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த காரணத்தால் அதிமுகவின் மீது திமுக வைத்த விமர்சனங்களும் கேள்விகளும் அப்படியே அமுங்கிப்போனது.

திமுக மீது தாக்குதல்

திமுக மீது தாக்குதல்

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்ற பிறகே பலமுனை தாக்குதல்கள் திமுக மீது நடந்து வருகிறது. மீண்டும் ஆளும் கட்சியாக மாறியுள்ள பாஜக முன்பைவிட அதிக அளவில் திமுகவை தாக்கி வருகிறது.

2021ல் அதிகமாக இருக்கும்

2021ல் அதிகமாக இருக்கும்

சித்தாந்த ரீதியாக திமுகவுக்கு நேர் எதிரான சிந்தனை கொண்ட கட்சியான பாஜக, அசுர பலத்துடன் ஆட்சிக்கு மீண்டும் வந்த பின்னரே மிகமோசமாக திமுகவை தாக்கி வருகிறது. இதை எதிர்கொண்டு கடும் பதிலடி ஸ்டாலின் கொடுத்து வந்தாலும், 2021 தேர்தலில் திமுகவுக்கு இதை விட அதிக தாக்குதல்களை அதிமுக பாஜக கூட்டணி அளிக்கும் என தெரிகிறது.

இல்லாவிட்டால் சிக்கல்

இல்லாவிட்டால் சிக்கல்

எனவே திமுக உடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக திமுகவுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து சமாளிக்க வேண்டும். இப்போது உள்ளதை போல் அமைதியாக வேடிக்கை பார்த்தால் அது திமுகவுக்கு அந்த கூட்டணிகளுக்குமே இழப்பாக முடியும். ஏனெனில் சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இப்படி சூழலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிருடன் இருந்த போது கூட திமுக கட்சி சந்தித்தது இருக்குமா என்பது பெரும் கேள்வி தான்.

English summary
bjp, aiadmk and pmk and dmdk attacked dmk over Ideology and politically. how dmk will reply
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X