சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்டே.. ஆரம்பிச்சிருச்சு அதிமுக, பாஜகவில் பஞ்சாயத்து!

பாஜகவுடன் கூட்டணிதான் தோல்விக்கு காரணம் என அமைச்சர் கூறி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஏன்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தோமோ என அதிமுகவில் ஒவ்வொருத்தராக நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் போல.. சிவகங்கையில் வெடித்து கிளம்பி உள்ளது இந்த விவகாரம்... இதையும் அதிமுக அமைச்சரே கிளப்பி உள்ளது அதைவிட டாக் ஆகி உள்ளது

வேண்டாம், வேண்டாம் என்று சொல்லியும் பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டது அதிமுக. இதன் பலனை மக்கள் தந்த பாடம் நன்றாகவே அனுபவித்து வருகிறது.

BJP alliance is the main cause to the Elections defeat: Minister Baskaran

ஒரே ஒரு இடத்தை தவிர வேறு எங்கியுமே அதிமுக ஜெயிக்கவில்லை. முதல்வர் தொகுதி உட்பட அமைச்சர்கள் வரை யாருமே ஓட்டுசதவீதத்தை தொகுதிகளில் தக்க வைத்து கொள்ளவில்லை.
இந்நிலையில், தோல்விக்கு காரணம் என்ன? யார் காரணம்? எதனால் மண்ணை கவ்வினோம் என்பது குறித்து அந்தந்த தொகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இப்படித்தான் சிவகங்கை தொகுதியிலும் கூட்டம் நடந்தது. இதற்கு கதர் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன்தான் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் மானாமதுரை சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கும், சிவகங்கை எம்பி தொகுதியில் பாஜக வேட்பாளா எச்.ராஜாவுக்கும் நன்றாகத்தான் வேலை பார்த்தோம்.

ஆனால் அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்கு எச்.ராஜாவோ, 20 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். இதற்கு காரணம் பாஜகவை தமிழக மக்கள் ஏற்காததுதான்" என்றாராம். ஒரு தமிழக அமைச்சரே பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசியுள்ளதுதான் இங்கு நன்றாக கவனிக்கப்பட வேண்டி உள்ளது!

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால், உங்களால்தான் தோற்றோம் என்று அதிமுகவும், எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் என பாஜகவும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டி கொண்டே இருக்கிறார்கள்.

English summary
TN Minister Baskaran said that the coalition with the BJP is the cause of Electoral defeat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X